லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளைய தினம் கூலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. கூலி திரைப்படத்தை பொருத்தவரை பெரிய நட்சத்திரக் கூட்டமே இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இதனால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
நாளை திரைக்கு வரும் கூலி: கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், வில்லன் கதாபாத்திரத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் வருகிறார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் இந்த திரைப்படத்தில் நடித்த ஒரு உச்சபட்ச நடிகர் எனக்கு சம்பளம் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.

சம்பளத்தை உயர்த்தினாரா ரஜினி: ரஜினிகாந்திற்கு இந்த திரைப்படத்திற்கு முதலில் 150 கோடி ரூபாய் சம்பளமாக வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டதாம், ஆனால் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து அட்வான்ஸ் புக்கிங் பல மடங்கு உயர்ந்ததால் அவருடைய சம்பளத்தை 200 கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்கள் என டெக்கன் ஹெரால்டு செய்தி கூறுகிறது. இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா சைமன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார் .இந்த படத்தில் அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது.

நடிகர்கள் சம்பளம்: அடுத்ததாக நடிகர் சத்யராஜ் மற்றும் கனடா நடிகர் உபேந்திரா ஆகிய இருவரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இவர்கள் தலா ஐந்து கோடி ரூபாயை சம்பளமாக பெற்று இருக்கின்றனர். கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் நடித்ததற்காக 4 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று இருக்கிறார்.

சம்பளம் வேண்டாம் என மறுப்பு: கூலி படத்தில் நடிகர் அமீர்கான் சிறப்பு தோற்றத்தை வருகிறார். இதற்காக அவருக்கு 20 கோடி ரூபாயை சம்பளம் வழங்குவதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாராக இருந்தது. ஆனால் அமீர்கான் எனக்கு இந்த படத்திற்கு எந்த ஒரு சம்பளமும் வேண்டாம் என கூறிவிட்டாராம் . நடிகர் ரஜினிகாந்தின் மீது இருக்கும் மரியாதை மற்றும் அவர் மீதான அன்பு காரணமாகவே தான் இந்த படத்தில் தோன்ற ஒப்புக்கொண்டதாகவும் இதற்கு எனக்கு சம்பளம் வேண்டாம் எனவும் அவர் மறுத்துவிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பிடுகிறது.
இயக்குநர் சம்பளம்: படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் 50 கோடி ரூபாயை இந்த படத்திற்கான சம்பளமாக பெற்றிருக்கிறார் . இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இந்த படத்திற்கு 15 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று இருக்கிறாராம். பூஜா ஹெக்டே மோனிகா பாடலுக்காக 3 கோடி ரூபாயை பெற்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications