Dream11க்கு தடை விதித்த மத்திய அரசு!! Dream money மூலம் ரூட்டை மாற்றிய ஹர்ஷ் ஜெயின் !!

இந்தியாவில் பணத்தை பந்தயமாக வைத்து விளையாடக்கூடிய ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து இருக்கிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரியல் மணி கேமிங் செயலியான டிரீம் 11(Dream11) செயலியும் தடை செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட டிரீம் 11 செயலி: டிரீம் 11 செயலி என்பது இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் பெருமளவில் பணம் வைத்து விளையாடும் ஒரு செயலியாக இருந்தது. ஆண்டுதோறும் இது வேகமாக வளர்ந்து வந்தது. இதன் உரிமையாளரான ஹர்ஷ் ஜெயின் டிரீம் ஸ்போர்ட்ஸ் என்ற தாய் நிறுவனத்தின் கீழ் தான் இதனை நடத்தி வந்தார். தற்போது டிரீம் 11க்கு தடை கிடைத்திருப்பதால் ஹர்ஷ் ஜெயின் உடனடியாக வேறு செயலியை களமிறக்க தயாராகி விட்டார்.

Dream11க்கு தடை விதித்த மத்திய அரசு!! Dream money மூலம் ரூட்டை மாற்றிய ஹர்ஷ் ஜெயின் !!

டிரீம் மணி: பர்சனல் ஃபைனான்ஸ் எனப்படும் தனிப்பட்ட நிதி மேலாண்மை துறையில் துறையில் கால் பதித்திருக்கிறது டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். பர்சனல் ஃபைனான்ஸ் அடிப்படையிலான டிரீம் மணி என்ற ஒரு செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான சோதனை ஓட்டங்கள் தற்போது நடைபெற்ற வருகின்றன . இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் மக்கள் இதன் வாயிலாக தங்கம் மற்றும் பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்வது தன்னுடைய அன்றாட செலவினங்களை கண்காணித்துக் கொள்வது என தங்களுடைய தனிப்பட்ட நிதி சம்பந்தமான அனைத்து சேவைகளையும் ஒரே செயலி வாயிலாக பெற்று விட முடியும்.

தங்கத்திலும் முதலீடு செய்யலாம்: டிரீம் 11க்கு தடை வந்த அடுத்த நாளிலேயே இப்படி ஒரு அறிவிப்பை டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. டிரீம் மணி என்பது நம்முடைய தனிப்பட்ட நிதியை மேலாண்மை செய்வதற்கு உதவக்கூடிய ஒரு செயலி ஆகும். இந்த செயலி மூலம் நாம் தங்கத்தில் முதலீடு செய்யலாம். எஸ் ஐபி முறையில் நாள்தோறும் 10 ரூபாய் முதலே முதலீடு செய்யும் வகையில் டிரீம் மணி நிறுவனம் டிஜிட்டல் கோல்டு நிறுவனத்தோடு கை கோர்த்துள்ளது. எனவே குறைந்த பணத்திலேயே தங்கம் முதலீட்டை சாத்தியமாக்க இருக்கிறது.

முதலீடு எளிமையாகிறது: அடுத்ததாக ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தையும் டிரீம் மணி செயலி கொண்டுள்ளது. குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து இந்த செயலி வாயிலாக நாம் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும் . இதற்கு எந்த ஒரு வங்கி கணக்கமும் தேவையில்லை. மேலும் நாம் நினைத்த நேரத்தில் அந்த பணத்தை டிரீம் மணி செயலியில் இருந்து திரும்ப பெற்று கொள்ளலாம். பாரம்பரியமாக நாம் வங்கிகளில் செய்யும் ஃபிக்சட் டெபாசிட்களில் இருந்து இது முதலீட்டை எளிமையாக மாற்ற உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+