நேற்று குளோசிங் பெல் செய்தியிலேயே, சென்செக்ஸ் டே சார்ட்டை, டெக்னிக்கலாகப் பார்த்தால், 41,150 லெவல்களில் இரண்டு டாப் உருவாகி, சென்செக்ஸ் அந்த 41,150 என்கிற இரண்டு டாப் ரெசிஸ்டென்ஸை அசால்டாக உடைத்து இருப்பதாகச் சொல்லி இருந்தோம். அப்படி இரண்டு டாப்களையும் நேற்றே சென்செக்ஸ் உடைத்துவிட்டது. அதன் பின்னும், சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டு 41, 352 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. எனவே 41, 950 வரை சென்செக்ஸ் அசால்டாக முன்னேற வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி இருந்தோம்.
அதோடு சந்தையில் இதே பாசிட்டிவ் செண்டிமெண்ட் நிலவினால், 41,500 புள்ளிகள் முதல் ரெசிஸ்டென்ஸாகவும், 41,750 புள்ளிகளை இரண்டாவது ரெசிஸ்டென்ஸாகவும் வைத்துக் கொள்ளலாம் எனவும் சொல்லி இருந்தோம். இன்று 41,500-ஐக் கடந்து சென்செக்ஸ் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எனவே அடுத்த இலக்காக 41,750 மற்றும் 41,950 புள்ளிகளை வைத்துக் கொள்ளலாம்.

நேற்று மாலை சென்செக்ஸ் 41,352 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,442 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,553 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய உச்சப் புள்ளி 182 புள்ளிகள் தான் அதிகம் என்றாலும், புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ்.
இன்று காலை நிஃப்டி 12,197 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,220 எனும் உச்சப் புள்ளியைத் தொட்டு வர்த்தகம் ஆகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 14 பங்குகள் ஏற்றத்திலும், 16 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,440 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. அதில் 1,072 பங்குகள் ஏற்றத்திலும், 1,190 பங்குகள் இறக்கத்திலும், 161 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகி வருகின்றன. 2,440 பங்குகளில் 39 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 90 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஐ டி சி, டாடா ஸ்டீல், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஹிதுஸ்தான் யுனிலிவர், கெயில், க்ராசிம், எஸ் பி ஐ, ஜி எண்டர்டெயின்மெண்ட் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications