இந்தியாவின் பிரதான நகரங்களில் வீடுகளின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. 1 கோடி ரூபாய் இருந்தால் தான் நகரின் முக்கிய இடத்தில் சிறிய அபார்ட்மெண்ட்டாவது கிடைக்கும் என்ற நிலை நிலவுகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே அகமதாபாத், புனே, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தான் அனைத்து தரப்பினரும் வீடு வாங்குவதற்கு ஏற்ற சந்தை நிலவரம் காணப்படுகிறது என நைட் பிராங்க் இந்தியா (Knight Frank India) நிறுவனம் தெரிவித்துள்ளது.
நைட் பிராங்க் இந்தியா நிறுவனம் இந்தியாவின் எட்டு முன்னணி நகரங்களை எடுத்து அந்த நகரங்களில் வசிப்பவர்களின் சராசரி வருமானம் மற்றும் அந்த நகரங்களில் ஒரு வீட்டினை வாங்கியவர்கள் மாதாந்திர வருமானத்தில் எவ்வளவு தொகையை மாதாந்திர தவணையாக செலுத்த வேண்டி இருக்கும் என்பதையும் ஒப்பீடு செய்து ஒரு அறிக்கையினை தயாரித்துள்ளது. இதன்படி அகமதாபாத் நகரம் தான் இந்தியாவிலேயே அனைத்து தரப்பினரும் வீடு வாங்குவதற்கு ஏதுவான நகரமாக இருக்கிறது. அதே வேளையில் மும்பையில் வீடு வாங்குவது அத்தனை எளிது அல்ல என்றும் கூறியுள்ளது.

ஒரு குடும்பம் தன்னுடைய வருமானத்தில் எத்தனை சதவிகிதத்தை மாதாந்திர ஈஎம்ஐ-ஆக செலுத்த வேண்டும் என்பதை தான் நைட் பிராங்க் இந்தியாவில் இந்த அறிக்கை சதவீதத்தில் குறிப்பிடுகிறது. இதன்படி அகமதாபாத்தில் வசிப்பவர்கள் தங்களுடைய வருமானத்தில் 21 சதவீதத்தை ஈஎம்ஐ -ஆக செலுத்தினாலே போதும். அதுவே புனே மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களை சேர்ந்தவர்கள் 24 சதவீதம் ஈஎம்ஐ செலுத்த வேண்டும். சென்னையைப் பொருத்தவரை 25 சதவீதம். அதாவது சென்னைவாசிகள் தங்களுடைய வருமானத்தில் 25 சதவீதம் பணத்தை ஈஎம்ஐ-ஆக செலுத்த வேண்டி இருக்கிறது.
பெங்களூருவில் 26 சதவீதம், என்சிஆரில் 28 சதவீதம் மற்றும் ஹைதராபாத்திலும் 30 சதவீதம் என இருக்கிறது. மும்பையில் சராசரியாக தங்களுடைய வருமானத்தில் 51 சதவீத தொகையை மக்கள் ஈஎம் ஐ-ஆக செலுத்த வேண்டி இருக்கிறது. எனவே மும்பையில் வீட்டு வீடுகளின் விலை கணிசமான அளவு உயர்ந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது. 2019 ஆம் ஆண்டில் மும்பையில் இது 67சதவீதமாக இருந்தது. அதாவது வருமானத்தில் 67 சதவீதத்தை மக்கள் ஈஎம்ஐ-ஆக செலுத்த வேண்டியிருந்தது. தற்போது அது குறைந்து இருக்கிறது.
சென்னையில் 2019ஆம் ஆண்டில் இது 30 சதவீதம் என இருந்து தற்போது 5% என குறைந்துள்ளது. பெங்களூரு, கொல்கத்தா, புனே ஆகிய நகரங்களிலும் ஈஎம்ஐ செலுத்தும் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications