பிரதமர் மோடி சொல்வது உண்மை தானா.. பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருக்கின்றனவா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரதமர் மோடியின் கவனம் இந்தியப் பொருளாதாரத்தின் பக்கம் திரும்பி இருப்பதாகத் தெரிகிறது. இது மகிழ்ச்சியான விஷயம் தான்.

 

இன்று பொருளாதார வல்லுநர்கள், ஈக்விட்டி முதலீட்டாளர்கள், வெஞ்சர் முதலீட்டாளர்கள், பெரு நிறுவன வியாபாரிகள், விவசாயத் துறை சார்ந்த நிபுணர்கள் என பலரையும் நிதி ஆயோக்கில் அழைத்துப் பேசி இருக்கிறார்.

இந்த கூட்டத்தில் "இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வருவதற்கான ஆற்றல் இருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறார்.

 உண்மை தானா

உண்மை தானா

பிரதமர் சொன்னது போல இந்தியப் பொருளாதாரம், இந்த மந்த நிலையில் இருந்து மீண்டும் வரும் ஆற்றல் கொண்டது தான். ஆனால் பிரதமர் சொல்வது போல இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் (Fundamental) வலுவாகத் தான் இருக்கிறதா..? இந்தியப் பொருளாதாரம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை 8 விஷயங்களைக் கொண்டு பார்க்கலாம்.
1. ஜிடிபி
2. அந்நிய நேரடி முதலீடுகள் FDI
3.அந்நிய நிறுவன முதலீடுகள் FII
4. ஆட்டோமொபைல் விற்பனை
5. வரி வசூல் விவரங்கள்
6. Disinvestment கணக்கு
7. வேலை இல்லா திண்டாட்டம்
8. விலை வாசி

 1. ஜிடிபி

1. ஜிடிபி

கடந்த 2016 - 17 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஜூன் 2016) 9.2 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் ஜிடிபி, கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் வெறும் 4.5 சதவிகிதமாக சரிவைக் கண்டு இருக்கிறது. கணக்கு போட்டுப் பார்த்தால், பாதிக்கு பாதி கூட வளர்ச்சி காணவில்லை.

 தொடர் சரிவு
 

தொடர் சரிவு

கடந்த 2019 - 20 நிதி ஆண்டில் பியுஷ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நேரடி வரி வருவாய் 13.8 லட்சம் கோடி ரூபாயும், மறைமுக வரி வருவாய் 11.6 லட்சம் கோடி வசூலிப்போம் என்று சொன்னார்கள். அடுத்து நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் நேரடி வரி வருவாய் 13.35 லட்சம் கோடி ரூபாயும், மறைமுக வரி வருவாய் 11.19 லட்சம் கோடி வசூலிப்போம் என்று சொன்னார்கள்.

 2. அந்நிய நேரடி முதலீடு FDI

2. அந்நிய நேரடி முதலீடு FDI

2014 - 15 நிதி ஆண்டு தொடங்கி 2019 - 20 (ஏப்ரல் - செப்டம்பர்) நிதி ஆண்டு வரை கணக்கில் எடுத்துக் கொண்டால், கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் தான் அதிகபட்சமாக, 62 பில்லியன் டாலர் முதலீடுகள் வந்து இருக்கிறது. ஆனால் இந்த 2019 - 20 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் வெறும் 34 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடுகள் வந்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.

 வளர்ச்சி இல்லை

வளர்ச்சி இல்லை

பெரிய அளவில் முதலீடுகளின் வளர்ச்சி அதிகரிக்கவில்லை. கிட்டத் தட்ட அந்நிய நேரடி முதலீடுகள் தேக்கம் காணத் தொடங்கி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாட்டில் முதலீடுகள் வரவில்லை என்றால் வளர்ச்சி சிரமம் தானே. ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் ஆட்டம் காணும் போது, இந்திய பொருளாதாரத்தின் ஃபண்டமெண்டல்கள் மட்டும் வலுவாக இருக்க முடியுமா என்ன..?

 3. அந்நிய நிறுவன முதலீடு FII

3. அந்நிய நிறுவன முதலீடு FII

2014 - 15 நிதி ஆண்டு தொடங்கி 2019 - 20 (ஏப்ரல் - ஜனவரி 22, 2020) வரையான காலத்தில் எப்போது அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்றால் அது 2014 - 15 நிதி ஆண்டில் தான் 2.77 லட்சம் கோடி ரூபாய் செய்து இருக்கிறார்கள்.

 வெளியேறிய முதலீடுகள்

வெளியேறிய முதலீடுகள்

கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் இந்தியாவில் முதலீடே வரவில்லை. மாறாக 38,930 கோடி ரூபாயை இந்தியாவில் இருந்து வெளியே எடுத்து இருக்கிறார்கள். இந்த 2019 - 20 நிதி ஆண்டிலும் 79,642 கோடி ரூபாய் மட்டும் தான் வந்து இருக்கிறதாம். இப்படி முதலீடுகள் சரிந்து கொண்டு இருக்கும் போது இந்தியாவின் ஃபண்டமெண்டல்கள் வலுவாக இருப்பதாகச் சொல்ல முடியுமா..?

 4. ஆட்டோமொபைல்

4. ஆட்டோமொபைல்

இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை சரிவைப் பற்றி அதிகம் சொல்லத் தேவை இல்லை. கடந்த 2016 - 17 நிதி ஆண்டில் 2.18 கோடி வாகனங்கள் விற்பனை ஆயின.
2017 - 18-ல் 2.49 கோடி, 2018 - 19-ல் 2.62 கோடி, 2019 - 20-ல் (ஏப் - டிச) 2.07 கோடி வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆயின. இது தான் இந்தியாவின் வலுவான பொருளாதார ஃபண்டமெண்டல்களா..?

 5. வரி வசூல்

5. வரி வசூல்

கடந்த 2019 - 20 நிதி ஆண்டில் பியுஷ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நேரடி வரி வருவாய் 13.8 லட்சம் கோடி ரூபாயும், மறைமுக வரி வருவாய் 11.6 லட்சம் கோடி வசூலிப்போம் என்று சொன்னார்கள். அடுத்து நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் நேரடி வரி வருவாய் 13.35 லட்சம் கோடி ரூபாயும், மறைமுக வரி வருவாய் 11.19 லட்சம் கோடி வசூலிப்போம் என்று சொன்னார்கள்.

எதார்த்தம்

எதார்த்தம்

ஆனால் உண்மையில் 2019 - 20 நிதி ஆண்டில் நேரடி வரி வருவாய் 11.5 லட்சம் கோடியும், மறைமுக வரி 9.5 லட்சம் கோடி வரலாம் என்கிறார்கள். ஆக ஒரு நாட்டில் நேரடி வரி மற்றும் மறைமுக வரி என இரண்டுமே நிர்ணயித்த அளவை அடையவில்லை. கடந்த 2018 - 19 நிதி ஆண்டை விட குறைவான அளவே வரி வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது என்றால் உண்மையில் நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருக்கிறதா..?

 6. Disinvestment சொதப்பல்

6. Disinvestment சொதப்பல்

பொதுவாக அரசு, தன்னிடம் இருக்கும் சொத்துக்களை விற்று பணத்தை திரட்டும் வழக்கம் உண்டு. இதை ஆங்கிலத்தில் Disinvestment என்பார்கள். இந்த Disinvestment வழியாக கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் 1 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து 1 லட்சம் கோடி வசூலித்தார்கள். 2018 - 19 நிதி ஆண்டில் 84,972 கோடி இலக்கு நிர்ணயித்து, 80,000 கோடி வசூலித்தார்கள்.

 அரசாலேயே முடியல

அரசாலேயே முடியல

ஆனால் உண்மையில் 2019 - 20 நிதி ஆண்டில் நேரடி வரி வருவாய் 11.5 லட்சம் கோடியும், மறைமுக வரி 9.5 லட்சம் கோடி வரலாம் என்கிறார்கள். ஆக ஒரு நாட்டில் நேரடி வரி மற்றும் மறைமுக வரி என இரண்டுமே நிர்ணயித்த அளவை அடையவில்லை. கடந்த 2018 - 19 நிதி ஆண்டை விட குறைவான அளவே வரி வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது என்றால் உண்மையில் நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருக்கிறதா..?

 7. வேலைவாய்ப்பு

7. வேலைவாய்ப்பு

தற்போது இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டத்தைக் கணிக்க புதிய முறையில் கணக்கு எடுத்தார்களாம். அதன் படி 2017 ஜூலை - 18 ஜூன் வரையான காலத்தில் வேலை இல்லா திண்டாட்டம் 6.1 சதவிகிதமாக இருக்கிறது. இந்த தரவை முந்தைய தரவுகளுடன் ஒப்பிட்டால் இது கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் மத்திய அரசோ பழைய முறையில் கணக்கிட்ட தரவையும், புதிய முறையில் கணக்கிட்ட தரவையும் ஒப்பிடுவது சரி அல்ல என வாதிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது தான் பிரதமர் சொன்ன வலுவான பொருளாதார அடிப்படைகளா..?

 8. விலைவாசி

8. விலைவாசி

கடந்த டிசம்பர் 2019-ல், சிபிஐ என்று சொல்லப்படுகிற நுகர்வோர் பணவீக்கக் குறியீடு (விலை வாசி) 7.35 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. இவ்வளவு அதிகமாக விலை வாசி அதிகரித்து இருப்பதால், ஆர்பிஐ இந்த முறை தன் ரெப்போ ரேட் வட்டி விகிதங்களைக் கூட குறைக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவுக்கு விலைவாசி இந்தியப் பொருளாதாரத்தை பாதித்துக் கொண்டு இருக்கும் போது, நம் மோடி மட்டும் எப்படி இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருக்கிறது என எதைப் பார்த்துச் சொல்கிறார் என்று தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

As PM said Is it really indian economy fundamental are strong

Prime minister Narendra modi said that the indian economy fundamental are strong. Is it really true..? Check the 8 indicators.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X