டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், இந்தியாவில் வாகனம் தயாரிப்பு மற்றும் வர்த்தக வாகன சந்தையில் ஒரு முக்கியமான கார்ப்பரேட் நிறுவனமாகும். பாரம்பரிய வாகன உற்பத்தியைத் தாண்டி, இந்நிறுவனம் எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் சரக்கு மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சரக்கு மற்றும் போக்குவரத்துத் துறையின் டிஜிட்டல் தளமான ஃபிரைட் காமர்ஸ் சொல்யூஷன்ஸ் (Freight Commerce Solutions) நிறுவனத்தில் கூடுதலாக ரூ.120 கோடி முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், கடந்த 2023 அக்டோபரில் செய்த ரூ.150 கோடி முதலீட்டையும் சேர்த்து, மும்பையை தளமாக கொண்ட இந்த லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் டாடா மோட்டார்ஸின் மொத்த முதலீடு ரூ.270 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த முதலீடு குறித்து பேசிய டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனங்களின் டிஜிட்டல் வணிகப் பிரிவு துணைத் தலைவர் டி.வி. சுவாமிநாதன், "இந்த முதலீட்டின் மூலம், நாங்கள் தொழில்நுட்பத்திற்கு நிதியளிப்பது மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் சரக்கு மற்றும் போக்குவரத்துத் துறையின் அடிப்படை அமைப்புகளையும் மறுவடிவமைக்கிறோம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "டாடா மோட்டார்ஸின் இந்த முதலீடு, இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அதன் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைக்கவும் உதவும் என்று அவர் கூறியுள்ளார். இது, வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு சிறப்பான, அதிக இணைப்புள்ள மற்றும் வாடிக்கையாளரை மையமாக கொண்ட சரக்குப் போக்குவரத்தை செயல்படுத்துவதே இலக்கு" என்றார்.
Mutual Fund முதலீட்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும்? இதை பாருங்க
இந்த முதலீட்டு செய்திக்கு மத்தியில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தைப் பயணிகள் வாகனப் பிரிவு மற்றும் வர்த்தக வாகனப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கும் செயல்முறை அக்டோபர் 1ஆம் தேதியான இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த செயல்பாட்டிற்கான பங்குதாரர்களின் பதிவேட்டு தேதி அக்டோபர் 2025 மத்தியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறுவனப் பதிவாளரின் இறுதி ஒப்புதலைப் பொறுத்தது.
தனித்தனியான ஒரு ஒழுங்குமுறைத் தாக்கல் செய்தியில், டாடா மோட்டார்ஸ் தனது துணை நிறுவனம் ஒன்று நெதர்லாந்தில் புதிய துணை நிறுவனத்தை இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. TML CV Holdings Pte Limited என்ற டாடா மோட்டார்ஸின் முழுச் சொந்த துணை நிறுவனம், TML CV Holdings B.V. என்ற பெயரில் நெதர்லாந்தில் புதிய முழுச் சொந்த துணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இந்த புதிய நிறுவனம், பல்வேறு வணிகங்கள், சட்ட நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பங்குகளை நிர்வகிக்கும் நோக்குடன் ஒரு ஹோல்டிங் நிறுவனமாக செயல்படும் என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications