உலகில் பல ஆயிரக்கணக்கான எரிமலைகள் இருக்கின்றன. இவற்றில் செயல்பாட்டில் உள்ள எரிமலைகள், உறங்கும் எரிமலைகள் , செயலற்ற எரிமலைகள் என வகைப்பாடு உள்ளது. செயல்பாட்டில் உள்ள எரிமலைகள் அவ்வப்போது வெடித்து சிதறி நெருப்பை வெளியிடும். சில எரிமலைகள் பல ஆயிரம் ஆண்டுகளாக அமைதியாக இருந்து திடீரென வெடித்து பெரிய சேதத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் திடீரென எரிமலை ஒன்று வெடித்துள்ளது.
எத்தியோப்பியாவில் உள்ள ஹயலி குப்பி என்ற எரிமலை சுமார் 12,000 ஆண்டுகளுக்கு பின் வெடித்து சிதறி இருக்கிறது. இந்த எரிமலை வெடிப்பு எத்தியோப்பியா மட்டுமில்லாமல் இந்தியாவுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட சாம்பல் மேகங்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு வேகமாக பரவி வருகின்றன. எத்தியோப்பியாவில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தில் இந்த சாம்பல் மேகங்கள் பயணம் செய்கின்றன.

எரிமலை வெடிப்பின் போது சிதறிய சாம்பல் சிவப்பு கடல் வழியாக ஏமன் உள்ளிட்ட நாடுகளில் பரவி தற்போது இந்தியாவின் நோக்கி வர தொடங்கி இருக்கிறது .இந்தியாவில் டெல்லி ,ஹரியானா ,உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை நோக்கி இந்த எரிமலை சாம்பல் வருவதாக சொல்லப்படுகிறது. முதலில் குஜராத்தினுள் நுழைந்து பின்னர் ராஜஸ்தான் ,டெல்லி ,வடமேற்கு மகாராஷ்டிரா ,ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இரவு 10 மணிக்குள் இந்த எரிமலை சாம்பல்கள் வந்து அடையும் என ஸ்கைமெட் நிறுவனம் கூறுகிறது.

பின்னர் இமயமலை மற்றும் பிற பகுதிகளுக்கும் செல்லும் என ஸ்கைமெட் அறிக்கை தெரிவிக்கிறது. எரிமலையால் ஏற்பட்ட இந்த சாம்பல் மேகம் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வட இந்தியாவில் நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கிறது . இதனால் விமானங்கள் இயக்கப்படுவதிலும் சிக்கல் ஏற்படும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே டெல்லியில் காற்று மாசு பிரச்சினை இருக்கும் நிலையில் இந்த எரிமலை சாம்பலும் டெல்லியை நோக்கி வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எரிமலை சாம்பல் வளிமண்டலத்திற்கு மேல் பல ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருக்கும் என்பதால் தீவிரமான பிரச்சினைகள் மக்களுக்கு இருக்காது என சொல்லப்படுகிறது.
சாம்பல் மேகம் வரும் போது வழக்கத்தை விட இருள் சூழந்து காணப்படும் என கூறப்படுகிறது. இந்த சாம்பல்களால் விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆகாசா ஏர், கேஎல்எம் ராயல் ஏர்லைன்ஸ், இண்டிகோ போன்ற விமானங்கள் தங்களுடைய சில விமான சேவைகளை ரத்து செய்து இருக்கின்றன . விமான போக்குவரத்து இயக்குனராகமும் விமான நிறுவனங்கள் சாம்பல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளது. அந்த இடங்களுக்கான விமான பயணத்தை மாற்றி அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது .
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications