மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான ஹிந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனம், கடந்த செப்டம்பர் காலாண்டில் 147 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் கொரோனா வைரஸ் காரணமாகவும் தேவை சரிவின் காரணமாகவும் வர்த்தக வாகன விற்பனை 28 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவே நஷ்டத்திற்கும் வழிவகுத்துள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் வருவாய் இரண்டாவது காலாண்டில் 2,837 கோடி ரூபாயாக கண்டுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 3,930 கோடி ரூபாயாகவும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிட்டதட்ட 4 மடங்கு நஷ்டம்
முந்தைய ஆண்டில் இந்த நிறுவனம் 39 கோடி ரூபாய் லாபம் கண்டிருந்த நிலையில், இந்த ஆண்டில் கிட்டதட்ட 4 மடங்கு நஷ்டத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரி மட்டும் வட்டிக்கு பிறகு வருவாய் (Ebitda) 65 சதவீதம் வீழ்ச்சி கண்டு 80 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. Ebitda மார்ஜின் 3 சதவீதத்தில் இருந்து, 2.8 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
வளர்ச்சி அதிகரிக்கும்
கொரோனாவின் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ள இந்த நிறுவனம், நடப்பு காலாண்டில் ஏற்றம் காணலாம் என்று அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி விபின் சோந்தி தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து நெட்வொர்க் விரிவாக்கம் குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். இந்த நிறுவனம் முந்தைய காலாண்டில் 389 கோடி ரூபாய் நஷ்டம் கண்டது. ஏனெனில் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 89 சதவீதம் குறைந்து 651 கோடி ரூபாயாக இருந்தது.
செலவினம்
இது மூலதன செலவு மற்றும் முதலீடுகளுக்குப் பிறகு அசோக் லேலண்ட் 1,208 கோடி ரூபாய் பணத்தினை ஈட்டியது. இது முந்தைய காலாண்டில் இருந்த 4,284 கோடி ரூபாய் கடனை, 3,076 கோடி ரூபாயாக குறைக்க உதவியது என்று நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் காலத்தில் வளர்ச்சி அதிகரிக்கலாம்
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் அளவு (Volume) நடப்பு நிதியாண்டில் 26 சதவீதம் குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனினும் அதே நேரம் 2022ம் நிதியாண்டு மற்றும் 2023ம் நிதியாண்டில் முறையே 106 சதவீதம் மற்றும் 18 சதவீதம் வளர்ச்சியினைக் காணும் என்றும் ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸின் ஆராய்ச்சித் தலைவர் மிதுல் ஷா தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிறுவனத்தின் Ebitda மார்ஜின் விகிதமானது 2022ம் நிதியாண்டில் 10.8 சதவீதமாகவும், 2023ம் நிதியாண்டில் 11.4 சதவீதமாகவும் இருக்கும் என்றும் கணித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications