இந்துஜா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் அசோக் லேலண்ட் ஐக்கிய அரபு அமீரகத்தில் 1400 பள்ளி பேருந்துகளுக்கான ஆர்டர்களை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஒரு ஆர்டரின் மதிப்பு மட்டும் 75.15 மில்லியன் டாலர் என தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப் பெரிய பேருந்து உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் 55 இருக்கைகள் கொண்ட ஃபால்கான் பேருந்து மற்றும் 32 இருக்கைகள் கொண்ட ஓயஸ்டர் பேருந்துகளை இந்த ஆர்டரின் பேயரில் தயாரித்து வழங்க உள்ளது.
மிகப் பெரிய ஆர்டர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் 1400 பள்ளி பேருந்துகளுக்கான கட்டளைகளைப் பெற்றுள்ள அசோக் லேலண்ட், ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக இவ்வளவு பெரிய ஆர்டரை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சென்னை - ஐக்கிய அரபு அமீரகம்
சென்னை - ஐக்கிய அமீரகம் அஷோக் லேலண்ட் தொழிற்சாலைகள் இதை இணைந்து தயாரிக்கின்றன. முழுமையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தயாரிக்க உள்ள அசோக் லேலாண்ட் 55 சதவீத உதிரிப்பாகங்கள், வடிவமைப்பு மற்றும் தொழிலாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள் எஹ தெரிவித்துள்ளது.
4000 பேருந்துகள்
ராஸ் அல் கைமா ஆலையானது அசோக் லேலண்ட் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ராஸ் அல் கைமா முதலீட்டு ஆணையம் (RAKIA) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக ஆண்டுக்கு 4,000 பேருந்துகளை நிறுவும் திறன் கொண்ட அலையாக இது உருவாகியுள்ளது.
ஆப்ரிக்க
2008-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தொழிற்சாலையிலிருந்து 25,500 பேருந்துகளை உற்பத்தி செய்து ஆப்ரிக்க நாடுகளுக்கு அசோல் லேலண்ட் ஏற்றுமதி செய்துள்ளது.
வளைகுடா நாடுகள்
அசோக் லேலாண்ட் வளைகுடா நாடுகளில் 7000-க்கும் மேற்பட்ட பேருந்துகளை விற்றுள்ளது. தினமும் 18 மில்லியன் பயணிகள் அசோக் லேலாண்ட் பேருந்துகளில் பயணிக்கின்றனர். மேலும் வணிக வாகனங்கள் "பார்ட்னர் டிரக்" மற்றும் "காசல் பேருந்துகளையும் அசோக் லேலாண்ட் உற்பத்தி செய்து விற்று வருகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications