படு வீழ்ச்சியில் அசோக் லேலண்ட்.. கவலையில் பங்குதாரர்கள்..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன நிறுவனமான அசோக் லேலண்ட் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 92.6 சதவிகிதம் நிகரலாபம் குறைந்து, 38.9 கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 527.7 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

படு வீழ்ச்சியில் அசோக் லேலண்ட்.. கவலையில் பங்குதாரர்கள்..!

இது குறித்து இந்த நிறுவனம் செபிக்கு அளித்துள்ள அறிக்கையில், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வருவாய் 3,929 கோடி ரூபாயாக உள்ளதாகவும், இது இதற்கு முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டில் 7,621 கோடி ரூபாயாக இருந்ததாகவும் கூறியுள்ளது. இது சுமார் 48 சதவிகிதம் வீழ்ச்சியாகும்.

நாட்டில் நிலவி வரும் கடுமையான பொருளாதார மந்த நிலையால் வாகன விற்பனையும் படு வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் இந்த நிறுவனம் இப்படி ஒரு படு வீழ்ச்சியும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிகளவிலான செலவினங்கள், உற்பத்தி செலவினங்கள், மேலும் ஆள்குறைப்பு நடவடிக்கை, உற்பத்தி குறைப்பு என பல வகையிலும் இந்த நிறுவனம் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், இந்த நடவடிக்கையின் எதிரொலி தற்போது தான் பலன் தர தொடங்கியுள்ளதாகவும் அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

இதே இந்த நிறுவனம் ஒன் டைம் நஷ்டமாக 64.8 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டு 19.3 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. செயல்பாட்டு வருவாய் 48.4 கோடி ரூபாய் குறைந்து, 3,9292.5 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே இதற்கு முன்பு 44 சதவிகிதம் குறைந்து 28,938 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலகு ரக வாகன விற்பனை 56 சதவிகிதம் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு 11 சதவிகிதம் குறைந்துள்ளது.

இதே அசோக் லேலண்ட் கடந்த அக்டோபரில் 9,857 வாகனங்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதில் டிரக்குகள் வாகன விற்பனையானது குறைந்துள்ளதாகவும், இதே பஸ் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாக குறைவான தேவைக்கு தகுந்தாற்போல் வாகன விற்பனையை மேம்படுத்த, இந்த நிறுவனம் வேலையில்லா நாட்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+