தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு இந்தியா முழுவதும் கனரக வாகன தயாரிப்பிலும், விற்பனையிலும் அசத்தி வரும் அசோக் லேலண்ட் அதன் மின்சார வாகனப் பிரிவான ஸ்விட்ச் மொபிலிட்டி பிரிவு மூலம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஸ்விட்ச் மொபிலிட்டி ஏற்கனவே எலக்ட்ரிக் பஸ் தயாரிப்பில் அசத்தி வரும் வேளையில் தற்போது வர்த்தக வாகன பிரிவின் மீது கவனத்தை திருப்பியுள்ளது.
அசோக் லேலண்ட் அதன் ஸ்விட்ச் மொபிலிட்டி பிரிவில் இரண்டு புதிய மின்சார வாகனங்களின் சிறிய டிரக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் சரக்கு வாகன பிரிவில் அதன் மின்மயமாக்கல் பயணத்தைத் தொடங்கியது. மேலும் இவ்விரு புதிய எலக்ட்ரிக் பிக்-அப் டிரக்குகள் light commercial vehicle (LCV) பிரிவில் முக்கிய போட்டியாளராக இருக்கும்.

ஹிந்துஜா குரூப் கீழ் இயங்கும் அசோக் லேலண்ட் தனது 75வது ஆண்டு விழாவையொட்டி, மின்சார சிறிய டிரக்குகளான IeV3 மற்றும் IeV4 ஆகியவற்றை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த டிரக்குகள் ஒரு நாளில் 300-கிமீ வரை இயக்கக்கூடிய Range கொண்டவை. இதில் மூன்று சார்ஜிங் விருப்பங்களை உள்ளது முக்கிய அம்சமாகும்.
கார் போன்ற அம்சங்களைக் கொண்ட புதிய டிரக்குகள், 1.2 டன் மற்றும் 1.7 டன்கள் எடை தாங்கும் திறன் கொண்டவை. தற்போது, இந்த பேலோடு கொண்ட மின்சார சிறிய லாரிகள் சந்தையில் இல்லை. 600 கிலோ எடையுள்ள ஒரு சிறிய மின்சார டிரக் மட்டுமே உள்ளது.
ஒரு நாளுக்கு 150 கிலோமீட்டர் வரையில் பயணம் செய்யும் கார்கோ வாகன உரிமையாளர்கள் IeV3 மற்றும் IeV4 வாகனங்கள் மூலம் மாதம் 17000 ரூபாய் சேமிக்க முடியும். இந்த சேமிப்பு எரிபொருள், மெயின்டனென்ஸ் தொகை மூலம் வருகிறது.
IeV3 மற்றும் IeV4 வாகனங்களுக்கு அறிமுகத்திற்கு முன்பே 13000 வாகனங்களுக்கு ஆர்டர் வந்துள்ளது. அமேசான், பிளிப்கார்ட், டிரன்ஸ்வோல்டு மற்றும் டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் இந்த ஆர்டரை செய்துள்ளது. இந்த 13000 வாகனங்களை அடுத்த 1 அல்லது 2 வருடத்திற்குள் டெலிவரி செய்யப்பட உள்ளது.
மேலும் இந்த வாகனம் ஒசூரில் தான் தயாரிக்கப்படுகிறது, மேலும் டெலிவரி அனைத்தும் ஜனவரி 2024ல் துவங்க உள்ளது. அடுத்த வருடம் முதல் சுமார் 100 அவுட்லெட்-டில் இந்த வாகனங்கள் விற்பனைக்கு வர உள்ளது.


Click it and Unblock the Notifications