அசோக் சூட்டா ஐடி துறையில் உள்ள முன்னோடிகளில் ஒருவர் ஆவார். 80 வயதிலும் தனது சிறப்பான பணிகளால் புதிய நிறுவனங்களை அவர் தொடங்கி வருகிறார். ரூர்க்கி ஐஐடியில் அவர் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். ஏசியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் மேனேஜ்மெண்டில் அவர் எம்பிஏ முடித்தார்.
1985 ஆம் ஆண்டில் அசோக் சூட்டாவை விப்ரோ நிறுவனத்துக்கு அசிம் பிரேம்ஜி வேலைக்கு எடுத்தார். 15 ஆண்டுகளாக அவர் விப்ரோ நிறுவனத் தலைவராக பதவி வகித்தார். 1999 ஆம் ஆண்டில் விப்ரோவில் இருந்து விலகிய அசோக் சூட்டா தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

பின்னர் அவர் பல நிறுவனங்களை உருவாக்கினார், அவற்றில் இரண்டை மிகவும் வெற்றிகரமான ஐபிஓ-க்களாக ஆக்கினார். சுப்ரோடோ பாக்சி மற்றும் கிருஷ்ண குமார் நடராஜன் உள்ளிட்ட 9 மூத்த ஐடி நிபுணர்களுடன் மைண்ட் ட்ரீயை நிறுவினார். அவர் 2006 இல் ஒரு வெற்றிகரமான ஐபிஓ நிறுவனத்தை வழிநடத்தினார்.
2011 ஆம் ஆண்டில் மைண்ட் ட்ரீயிலிருந்து விலகிய அசோக் சூட்டா தனது அடுத்த பெரிய நிறுவனமான ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜியை நிறுவினார். இந்த நிறுவனம் 2020இல் மிகப் பெரிய ஐபிஓ நிறுவனமாக பெயர் பெற்றது.
அதன் பின்னர் அவர் 2021 ஆம் ஆண்டில் பிரபல ஹெல்த்கேர் மருத்துவ ஆராய்ச்சி டிரஸ்ட்டான SKAN நிறுவனத்தை தொடங்கினார். 2022 ஆம் ஆண்டில் அவர் தனது நான்காவது நிறுவனமான ஹேப்பியஸ்ட் ஹெல்த்தை தனது 79 ஆவது வயதில் நிறுவினார்.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இதை மிகப் பெரிய வெற்றிகரமான ஐபிஓ வாக ஆக்குவதற்கு இலக்கு வைத்துள்ளார். அசோக் சூட்டா ஒரு சிறந்த நன்கொடையாளர் ஆவார். அவர் ரூ.600 கோடியை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் அளித்துள்ளார்.
2022 போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள அசோக் சூட்டாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.9000 கோடி ஆகும். பெங்களூரை தளமாகக் கொண்டு இயங்கும் தொழில்நுட்ப நிறுவனமான ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸின் பெரும்பான்மையான பங்குகளில் இருந்து அவர் தனது பெரும் செல்வத்தைப் பெற்றுள்ளார்.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications