69 வயதில் ஓய்வெடுக்க வேண்டும் என்பது தான் பலரின் விருப்பம். ஆனால் இவர் 69 வயதில் ஒரு ஐடி நிறுவனத்தை தொடங்கி அதனை 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக உருவாக்கியுள்ளார். அசோக் சூடா, ஐடி துறையில் மேஜிக் மேன் என அறியப்படக்கூடியவர்.
1978 ஆம் ஆண்டு அவர் ஸ்ரீராம் ரெஃப்ரிஜிரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார் .தொடர்ந்து நான்கு ஆண்டு காலம் நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம் இவர் பொறுப்பேற்றதற்கு பிறகு லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. 1984 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அசோக் விப்ரோ இன்போடெக் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அசோக் சூடாவின் வருகைக்குப் பிறகு விப்ரோ இன்போடெக் நிறுவனத்தின் வருமானம் 22 கோடி ரூபாயிலிருந்து 2200 கோடி ரூபாய் என அதிகரித்தது.

1999 ஆம் ஆண்டில் ஒன்பது ஐடி நிபுணர்களோடு இணைந்து இவர் தொடங்கியது தான் மைண்ட்ட்ரீ நிறுவனம். ஆறு ஆண்டுகளிலேயே ஆண்டுக்கு சுமார் 450 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. 2007 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்து மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. இதனை அடுத்து பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து 2011ஆம் ஆண்டு அசோக் சூடா மைண்ட்ட்ரீ நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
33 ஆண்டுகள் இந்த துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவருக்கு அப்போது வயது 69. அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்த அவருக்கு அவர் 9 மாதங்களிலேயே ஹேப்பியஸ்ட் மைண்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். கிளவுட் கம்ப்யூட்டிங், சோசியல் மீடியா ,அனலிட்டிக்ஸ் மற்றும் செக்யூரிட்டி ஆகிய அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய ஐடி நிறுவனமாக இது இருக்க வேண்டும் என்பதுதான் அசோக்கின் நோக்கம். தொடங்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே இந்த நிறுவனம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்களை ஈர்த்தது.
மேலும் 5 இடங்களில் அலுவலகத்தையும் திறந்தது. பின்னர் பல்வேறு முதலீட்டாளர்களும் ஹேப்பியஸ்ட் மைண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்தனர். 2018 ஆம் ஆண்டு இவரது நிறுவனம் ஆண்டுக்கு 460 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனமாக தொடங்கியது. பின்னர் இந்த நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்து பெருமளவிலான முதலீடுகளை ஈர்த்தது. தற்போது ஹேப்பியஸ்ட் மைண்ட் நிறுவனம் ஆண்டுக்கு 1710 கோடி ரூபாய் வருமானம் பெறும் நிறுவனமாக இயங்குகிறது.
இந்த நிறுவனம் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, கனடா ,ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கும் ஐடி சேவைகளை வழங்கி வருகிறது. அசோக் சூடா கிட்டத்தட்ட தன்னுடைய வாழ்நாளில் 100க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி இருக்கிறார். இவர் இந்தியாவில் பார்க்கின்சன் மற்றும் அலசைமர் நோய்களுக்கான ஆராய்ச்சிகளுக்காக 375 கோடி ரூபாய் உதவி தொகையாக வழங்கியிருக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications