ஐபிஎல் துவங்கும் முன் அஸ்வின்-க்கு இப்படியொரு கிப்ட்-ஆ.. வாழ்நாள் முழுவதும் மாறாது..!

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வசிக்கக்கூடிய சாலைக்கு அவருடைய பெயரையே சூட்ட சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் அஸ்வின் ரவிச்சந்திரன். இந்திய சுழல் பந்து ஜாம்பவான் என்றும் ரசிகர்கள் இவரை அழைக்கின்றனர். அந்த அளவுக்கு இவரது பந்து வீச்சு இருக்கும். இந்நிலையில் அஸ்வின் ரவிச்சந்திரன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பார்டர் கவாஸ்கர் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அஸ்வின் மூன்றாவது போட்டியின் முடிவில் திடீரென தன்னுடைய ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

ஐபிஎல் துவங்கும் முன் அஸ்வின்-க்கு இப்படியொரு கிப்ட்-ஆ.. வாழ்நாள் முழுவதும் மாறாது..!

அஸ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். பல்வேறு போட்டிகளில் 700க்கும் அதிகமான விக்கட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் அஸ்வின் ரவிச்சந்திரன் இந்த முறை ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாட இருக்கிறார்.

கிரிக்கெட் விளையாட்டில் அஸ்வினின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சென்னையில் இருக்கும் ஒரு தெருவுக்கு அஸ்வின் ரவிச்சந்திரனின் பெயரை சூட்ட முன்வந்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணபுரம் ஒன்றாவது தெருவில் தான் அஸ்வின் வசித்து வருகிறார். இந்த ராமகிருஷ்ணபுரம் ஒன்றாவது தெருவுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் என பெயர் சூட்ட சென்னை பெருநகர மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த தெருவுக்கு அஸ்வின் பெயரை சூட்ட வேண்டும் என சென்னை மாநகராட்சியிடம் பல தரப்பிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று தான் சென்னை மாநகராட்சி நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமான பெயர் மாற்றம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவின் புகழ்பெற்ற சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார். தற்போது இவர் சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் . ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாட இருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து தேசிய அணிக்கு சென்று சிறந்த பங்களிப்பை தந்த வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

முன்னதாக மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அவர் வசித்து வந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது .அதேபோல மறைந்த நடிகர் விவேக் குடும்பம் முன்வைத்த கோரிக்கை ஏற்று விருகம்பாக்கத்தில் அவர் வீடு அமைந்திருக்கும் சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் சூட்டப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+