வெங்காயம்...! இந்தியாவில் பெரும்பாலானவர்களின் அன்றாட உணவின் ஒரு அங்கம். இந்த வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக விராட் கோலி சதங்களின் கணக்கு போல புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது.
இந்த சமயத்தில் தான், வெங்காயத்தின் விலை குறித்து, நேற்று பாராளுமன்றத்தில் பேச்சு எழுந்தது.
அப்போது பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் "நான் அதிகம் வெங்காயம் பூண்டு சாப்பிடுவதில்லை, ஆகையால் கவலைப் பட வேண்டாம். நான் அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வருகிறேன்" எனப் பேசினார்.
சமூக வலைதளம்
இந்த சம்பவம் ட்விட்டர், ஃபேஸ்புக் என அனைத்து சமூக வலை தளங்களிலும் தீ பற்றி எரியத் தொடங்கிவிட்டது. வழக்கம் போல மீம்ஸ் மழை, ட்ரோல் மயம் தான். அது ஒரு பக்கம் இருக்க, இப்போது மத்திய நிதி அமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்னொரு அமைச்சர், பேசி இருக்கிறார்.
அந்த அமைச்சர்
"நான் ஒரு சைவ உணவு சாப்பிடுபவன். நான் இதுவரை வெங்காயத்தை சாப்பிட்டதே இல்லை. எனவே என்னைப் போன்ற ஒருவருக்கு வெங்காயத்தின் விலை நிலவரம் எப்படி தெரியும்..?" என ஆழமாக யோசித்து கேள்வி எழுப்பி இருக்கிறார் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல் வாழ்வுத் துறை இணை அமைச்சர் அஸ்வினி செளபே.
நிதி அமைச்சருக்கு ஆதரவு
அதன் பிறகு பேசிய அஸ்வினி செளபே, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெங்காய விலை தொடர்பாகவும், வெங்காய விவசாயிகளுக்கும், மத்திய அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது என பாராளுமன்றத்தில் தெளிவாக பதில் கொடுத்து இருக்கிறார். பிறகு என்ன என்கிற ரீதியில், நிதி அமைச்சருக்கு ஆதரவாகப் பேசி இருக்கிறார்.
ப சிதம்பரம் பதில்
இந்த சம்பவம் குறித்து, முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் "நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயத்தை சாப்பிட மாட்டார் என்றால், அவகேடோ (ஒரு வகையான் பழம்) சாப்பிடுவாரா..?" என ட்ரோல் செய்து இருக்கிறார். அதோடு,"இது போன்ற சூழலில், ஒரு நிதி அமைச்சர் தான் வெங்காயம் சாப்பிடுவதில்லை எனச் சொன்னால், அது அவர்கள் அரசின் மன நிலையைக் காட்டுகிறது" எனச் சொன்னது குறிப்பிடத்தக்கது.
என்ன செய்ய
மக்கள் ஒரு பக்கம், வெங்காயத்துக்கு லோன் வாங்காத குறையாக, வெங்காயத்துக்கு 100 - 150 ரூபாய் விலை கொடுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நம் அமைச்சர்களோ... நான் வெங்காயம் சாப்பிட்டதே இல்லை, நான் வெங்காயத்தை கொஞ்சமாகத் தான் சாப்பிடுவேன் என மக்களின் மன நிலையை புரிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். மாறும் என நம்புவோம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications