டெல்லி : இந்தியாவின் பொருளாதாரம் நலிவடைந்து வரும் நிலையில், ஆசியன் டெவலப்மென்ட் வங்கி, 2019ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.1 சதவிகிதமாக வீழ்ச்சி காணும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த டெவலப்மென்ட் வங்கி முன்னர் 6.5 சதவிகிதமாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே 2020ம் நிதியாண்டில் 6.5 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதே இதற்கு முன்னர் 7.2 சதவிகிதமாக மதிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையானது மெதுவான வேலை வளர்ச்சி மற்றும் மோசமான அறுவடையால் மோசமடைந்துள்ள கிராமப்புற துயரங்கள் காரணமாக நுகர்வு வீழ்ச்சியடைவதையும் இந்த அறிக்கை மேற்கோளிட்டது.
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கான மதிப்பீடுகளை இந்த ஆண்டு 6.1 சதவிகிதமாகவும் மதிப்பிட்டுள்ளது. இதே அடுத்த ஆண்டு 5.8 சதவிகிதமாகவும் இந்த வங்கி தெரிவித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் செய்த கணிப்பானது 6.2 சதவிகிதமாகவும் மற்றும் 6 சதவிகிதமாகவும், இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் முறையே கணித்திருந்தது.
அமெரிக்கா சீனா வர்த்தக பதட்டங்கள் மற்றும் பலவீனமான உள்நாட்டு தேவை காரணமாக உலகளாவிய செயல்பாடு குறைந்து வருவதே, இந்த திருத்தற்திற்கு முக்கிய காரணம் என்றும் அறிக்கையில் கூறியுள்ளது. எனினும் அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகத்தில் ஒரு உடன்பாட்டை எட்டினால் வளர்ச்சி துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கண்டத்தில் இரண்டு நாடுகள் மிகப்பெரிய கண்டத்தில் இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்களின் நிலையை இது பாதித்துள்ளது. ஏடிபி அதன் வளர்ச்சி கணிப்பை 2019ல் 5.2 சதவிகிதமாகவும், இதே 2020ல் 5.4 சதவிகிதமாகவும், இதே இதற்கு அடுத்த ஆண்டில் 5.5 சதவிகிதமாகவும் கணித்துள்ளது. தொடர்ச்சியான வர்த்தக பதட்டங்கள் இப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இது நீண்ட கால பொருளாதார கண்ணோட்டத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும்.
இது தவிர வணிக உணர்வு குறைந்துவிட்டதால், பல நாடுகளில் உள்நாட்டு முதலீடுகள் பலவீனமடைந்து வருகிறது. இந்த நிலையில் இந்த இரு ஆசிய நாடுகளிலும் சில்லறை உணவு பணவீக்க விகிதம், இந்த ஆண்டு 2.8 சதவிகிதமாகவும், இதே அடுத்த ஆண்டில் 3.1 சதவிகிதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications