இந்தியாவில் பெயிண்ட் உற்பத்தி மற்றும் விற்பனை துறையில் இரண்டு முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தியாவில் பெயிண்ட் உற்பத்தி மற்றும் விற்பனை சந்தை மிகப்பெரியது.ஒரு வீட்டினை அழகையும் அந்த வீட்டில் இருப்போரின் அந்தஸ்தையும் காட்டும் ஒரு குறியீடாக பெயிண்டுகள் மாறி வருகின்றன.
அத்தியாவசியத்தை தாண்டி அழகுக்காக வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தனித்துவமாக பெயிண்ட் செய்யும் போக்கு இந்திய மக்கள் இடையே அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெயிண்ட் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தொழிலை மேம்படுத்தி வருகின்றன. தற்போது இந்தியாவின் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்தக்கூடியதாக இருக்கிறது. ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக பிர்லா ஓபஸ், ஜேஎஸ்டபிள்யூ பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சந்தையில் கணிசமான வாடிக்கையாளர்களை கொண்டு இருக்கின்றன.

இந்த சூழலில் ஜேஎஸ்டபிள்யூ பெயிண்ட் நிறுவனம் Akzo Nobel இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து நிறுவனத்தின் 74% பங்குகளை வாங்கம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. 8,986 கோடி ரூபாய்க்கு ஆக்சோ நோபல் இந்தியா லிமிடெட் நிறுவன பங்குகளை ஜேஎஸ்டபிள்யூ பெயிண்ட்ஸ் நிறுவனம் வாங்க இருக்கிறது. நெதர்லாந்தை சேர்ந்த பெயிண்ட் மற்றும் இன்டஸ்ட்ரியல் கோட்டிங் நிறுவனம் தான் ஆக்சோ நோபல். இந்நிறுவனம் இந்தியாவிலும் Dulux என்ற பிராண்டில் டெகரேட்டிவ் பெயிண்ட் மற்றும் கோட்டிங் பொருட்களை விற்பனை செய்கிறது. இந்த துறையில் தன்னை வலுப்படுத்த திட்டமிட்டிருக்கும் ஜேஎஸ்டபிள்யூ , இந்த நிறுவனத்தை பெரிய தொகைக்கு வாங்கி இருக்கிறது.
இரு நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பாக அனுமதி கோரி இந்திய போட்டி ஆணையத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது.இந்த ஆணையம் அனுமதி அளித்தவுடன் அக்சோ நோபல் இந்தியா ஜேஎஸ்டபிள்யூ வசம் வந்துவிடும்.
அதே போல இந்தியாவின் மிகப்பெரிய பெயிண்ட் உற்பத்தி நிறுவனமான White Teak என்ற பிராண்டின் கீழ் செயல்பட்டு வரும் Obgenix Software Private Limited நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் வீடுகளுக்கான அலங்கார விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்தியாவில் இந்த சந்தையும் வேகமாக வளர்ந்து வருவதால் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் இதனை வாங்கியுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனத்தின் 60 % பங்குகளை ஏசியன் பெயிண்ட்ஸ் வாங்கி வைத்திருந்தது.
தற்போது வைட் டீக் நிறுவனத்தின் மீதமிருந்த 40% பங்குகளை அதன் பிரமோட்டர்களான பவன் மற்றும் ககன் மேத்தாவிடம் இருந்து இந்நிறுவனம் வாங்கி இருக்கிறது. இதன் மூலம் வைட் டீக் நிறுவனத்தின் 100% பங்குகளும் ஏசியன் பெயிண்ட்ஸ் வசம் வந்திருக்கிறது. வைட் டீக் தங்களின் துணை நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது என ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications