ஏசியன் பெயிண்ட்ஸின் முன்னாள் தலைவரும், நிர்வாக அதிகாரமில்லா இயக்குனருமான அஸ்வின் டானி காலமானதாக இந்நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அஸ்வின் டானி-க்கு 79 வயதாகிறது.
1968 ஆம் ஆண்டு முதல் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்பில் அஸ்வின் டானி பணியாற்றி வந்தார். இந்த நிறுவனம் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு இழுத்துச் சென்றதில் இவருடைய பணியும், பங்கீடும் மிகவும் முக்கியமானது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அஸ்வின் டானி 1970 இல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்ந்தார். அவர் 1998 முதல் 2009 வரை அதன் துணைத் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார். 2009க்குப் பிறகு, அவர் நிர்வாகமற்ற இயக்குநராகவும் துணைத் தலைவராகவும் நிர்வாகக் குழுவில் தொடர்ந்தார். 2018 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட காலத்தில் அஸ்வின் டானி ஏசியன் பெயிண்ட்ஸ்-ன் தலைவர் பதவியில் வகித்தார்.
இதுகுறித்து ஏசியன் பெயிண்ட்ஸ் வெளியிட்ட அறிவிப்பில் ஆழ்ந்த வருத்தத்துடன், நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநரான அஷ்வின் டானி, குறுகிய கால நோய் காரணமாக உடல் நலப் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று காலமானார் என்பதை நாங்கள் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியது.
ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் மதிப்பு மட்டும் 3.04 லட்சம் கோடி ரூபாய். 2023 ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் சுமார் 30,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 26, 1944 இல் பிறந்த அஸ்வின் டானி மும்பையில் வளர்ந்தார். 1966 இல் மும்பை பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர், அக்ரான் பல்கலைக்கழகத்தின் மாஸ்டர் ஆஃப் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர அமெரிக்கா சென்றார்.
அமெரிக்காவின் தொழிற்சாலை நகரமான டெட்ராய்ட்-ல், அஸ்வின் டானி ஒரு விஞ்ஞானியாகத் தனது பணியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, மூத்த நிர்வாகியாக, தன் குடும்பத்துக்குச் சொந்தமான ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்.
அஸ்வின் டானி தலைமையில் தான் கம்ப்யூட்டர் கலர் மேட்சிங் என்ற ஐடியா முதன்முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்து பெயிண்ட் வர்த்தகத்தில் பெரும் மாற்றத்தையும், லாபகரமான ஒன்றாக மாற்றினார் அஷ்வின் டானி. இந்த ஐடியா தற்போது இந்தியாவில் பெயிண்ட், பாலிமர்ஸ், பிரிண்டிங் மை மற்றும் டெக்ஸ்டைல்ஸ் போன்ற பல துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications