அசின் முதல் சுஷ்மிதா சென் வரை.... தொழிலதிபர்களிடம் மனதை பறிகொடுத்த நடிகைகள்!

முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென் உடன் டேட்டிங் செய்துகொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

லலித் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் சுஷ்மிதா சென் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த நிலையில் லலித் மோடி விரைவில் சுஷ்மிதா சென் அவர்களை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார். 56 வயதான லலித்மோடி 46 வயதான சுஷ்மிதா சென் அவர்களை திருமணம் செய்வாரா? அல்லது டேட்டிங் மட்டுமே தொடருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இந்த நிலையில் பாலிவுட் நடிகைகள் தொழிலதிபர்களை காதலித்து தங்கள் வாழ்க்கை துணையாக ஏற்று கொண்டவர்களின் பட்டியல் இதோ:

ஷில்பா ஷெட்டி - ராகுல் குந்த்ரா

ஷில்பா ஷெட்டி - ராகுல் குந்த்ரா

1. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, துபாயைச் சேர்ந்த பிரிட்டிஷ்-இந்திய தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து மணந்தார். தற்போது இருவரும் சில பிரச்சனைகள் காரணமாக பிரிந்து உள்ளனர்.

2. டினா முனிம் - அனில் அம்பானி

2. டினா முனிம் - அனில் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் இளைய மகன் அனில் அம்பானியை பாலிவுட் நடிகை டினா முனிம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

3. அசின் - ராகுல் ஷர்மா

3. அசின் - ராகுல் ஷர்மா

'கஜினி' நடிகை அசின் தனது நீண்டகால காதலரான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் சர்மாவை மணந்தார். இந்த தம்பதிக்கு அரின் என்ற மகள் உள்ளார்.

இஷால் தியோல் - பாரத் தக்தானி

இஷால் தியோல் - பாரத் தக்தானி

பாலிவுட்டி நட்சத்திர தம்பதிகளான தர்மேந்திரா மற்றும் ஹேமா மாலினியின் மகளான இஷா தியோல் தனது நெருங்கிய நண்பரான வைர வியாபாரி பாரத் தக்தானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

செலினா ஜெட்லி - பீட்டர் ஹாக்

செலினா ஜெட்லி - பீட்டர் ஹாக்

பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி வெற்றிகரமான தொழிலதிபரும் ஹோட்டல் அதிபருமான பீட்டர் ஹாக்கை மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு முறை இரட்டை குழந்தைகள் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

ப்ரீத்தி ஜிந்தா - ஜீன் குட்னஃப்

ப்ரீத்தி ஜிந்தா - ஜீன் குட்னஃப்

பிரபல பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா, அமெரிக்காவைச் சேர்ந்த நீர்மின்சார நிறுவனத்தின் நிதித்துறையின் மூத்த துணைத் தலைவரான ஜீன் குட்னஃப் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்று கொண்டனர்.

தியா மிர்சா - வைபவ் ரேகி

தியா மிர்சா - வைபவ் ரேகி

பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா தனது முதல் கணவர் சாஹில் சங்கை பிரிந்த பிறகு, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் வைபவ் ரேகியை கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

சோனம்கபூர் - ஆனந்த் அஹூஜா

சோனம்கபூர் - ஆனந்த் அஹூஜா

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை காதலித்து மணந்தார். தற்போது சோனம்கபூர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

மௌனி ராய் - சூரஜ் நம்பியார்

மௌனி ராய் - சூரஜ் நம்பியார்

நடிகை மௌனி ராய் ஜனவரி 27, 2022 அன்று ஹில்டன் கோவா ரிசார்ட்டில் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மூன்று வருட காதலுக்கு பின் இவர்களது திருமணம் கோவா தலைநகர் பனாஜியில் நடந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+