வருமான வரித்துறை தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் முறையாக வருமான வரி செலுத்துகிறதா? என்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரி எய்ப்பு செய்தல், சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்தல் மற்றும் பிற நிதி முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வருவதால், இதைத் தடுக்கும் பொருட்டு இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
அதற்கேற்ப வருமானவரித் துறையும் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி வருமானவரித்துறை அதிகாரிகள் வரி செலுத்துவோரின் மின்னஞ்சல்கள், சமூக ஊடக கணக்குகள், வங்கி மற்றும் வர்த்தக கணக்குகள் போன்றவற்றை அணுகும் அதிகாரம் பெற போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது 2026 முதல் 2027-ஆம் நிதியாண்டில் இந்தச் சட்டம் அமலுக்கு வரலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் முன்னாள் இன்போசிஸ் CFO மோகன்தாஸ் பாய் வருமானவரித் துறையின் இந்த புதிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பதிவில் ஒரு போஸ்டையும் பகிர்ந்துள்ளார்.

வருமானவரித்துறை அதிகாரிகள் தனிநபர்களின் மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடக கணக்குகளை அணுகும் சட்டம் அமலுக்கு வந்தால், தனி நபர்களின் விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க போதிய பாதுகாப்பு வசதியை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இது குறித்து தனது X பதிவில் மோகன்தாஸ் பாய், "அடுத்த நிதியாண்டு முதல் உங்களுடைய மெயில் மற்றும் சமூக ஊடக கணக்குகள் வருமான வரித்துறையால் அணுகப்படலாம். இது நமது உரிமைகள் மீதான தாக்குதல்! நம் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு எதிராக அரசாங்கம் பாதுகாப்பை வழங்க வேண்டும். அதற்கு முன் நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும்", என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். அவர் தனது பதிவில் பிரதமர் நரேந்திர மோடியையும் டேக் செய்துள்ளார்.
https://x.com/TVMohandasPai/status/1896894111782666304?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1896894111782666304%7Ctwgr%5Ec558df5bbcc08ecef0b6c0ecf9007dbc8418cf62%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.livemint.com%2Fmoney%2Fpersonal-finance%2Fassault-on-rights-mohandas-pai-lashes-out-at-new-income-tax-rule-that-may-let-officers-monitor-your-emails-and-more-11741158184652.html
புதிய வருமான வரி விதி 2026-ஆம் ஆண்டின் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு தனிநபர் வருமான வரியை தவிர்த்து விட்டாலோ அல்லது வெளியிடாமல் இருந்தாலோ அவர்களுடைய வருமானம், பணம், தங்கம், நகைகள், மதிப்புமிக்க பொருட்கள், சொத்து ஆகியவற்றை சந்தேகித்தால் வரி அதிகாரிகள் தனிநபர்களின் கணக்குகளை அணுகலாம். வருமான வரிச் சட்டம் 1961 விதிகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் உங்கள் வீடு, லாக்கர், அலுவலகம் ஆகியவற்றுக்குள் நுழைந்து உங்களிடம் ஏதேனும் வெளியிடப்படாத சொத்துக்கள் உள்ளதா என்பதை கண்டறிய அனுமதிக்கப்படுகிறார்கள்.
வருமான வரி மசோதாவின் பிரிவு 247 இன் படி அங்கீகரிக்கப்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரு வீட்டின் கதவு, பெட்டி, லாக்க,ர் அலமாரி அல்லது பூட்டை உடைத்து தங்கள் அதிகாரங்களை பயன்படுத்தி அணுகலாம், இது லாக்கர் போன்றவற்றுக்கு மட்டுமல்லாமல் கட்டிடம், இடம் போன்றவற்றுக்கும் பொருந்தும். அதேபோலதான் அதிகாரிகள் தனிப்பட்ட மின்னஞ்சல்கள், வர்த்தகம், வங்கி கணக்குகள் மற்றும் சமூக ஊடக கணக்குகளையும் சட்டபூர்வமாகவே அணுக முடியும். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க வரி செலுத்துவோர் தங்கள் கடமையை சரிவர செய்தால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications