கொரோனா தாண்டவம்.. தொடரும் உயிரிழப்புகள்.. 'இந்த' விஷயத்தில் கட்டாயாம் தெளிவாக இருக்க வேண்டும்.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் மிக மோசமடைந்து வருகின்றது. இந்த மோசமான பெருந்தொற்றினை தடுக்க அரசும் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றது. எனினும் அதற்கெல்லாம் இந்த கொரோனா மடிந்ததாக தெரியவில்லை.

நாளுக்கு நாள் இதன் உக்கிரம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. மரண ஓலங்களும் அதிகரித்து கொண்டே உள்ளன. கொரோனா என்னும் பேரழையில் சிக்கித் தவித்து வரும் நாம், அந்த மோசமான அலையினால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பயணித்து வருகின்றோம். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் வாழ்ந்து வருகின்றோம்.

 முழு லாக்டவுன்: மக்களை மீண்டும் அச்சுறுத்தும் வேலைவாய்ப்பு இழப்பு.. என்ன நடக்கப்போகிறது..?! முழு லாக்டவுன்: மக்களை மீண்டும் அச்சுறுத்தும் வேலைவாய்ப்பு இழப்பு.. என்ன நடக்கப்போகிறது..?!

இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் நமக்கு பிடித்தவர்களை, இழப்பீடு செய்ய முடியாதவர்களை இழந்து விட்டால் அடுத்து என்ன செய்வது என தெரியாது குடும்பமே தத்தளிக்கும். உங்களது இழப்பீட்டினை ஈடுகட்ட முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் பொருளாதார ரீதியில் ஆவது அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை அந்த சமயத்தில் நம்மால் உறுதி செய்ய முடியும். அதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க விருக்கின்றோம்.

தெளிவாக அப்டேட் செய்யுங்கள்

தெளிவாக அப்டேட் செய்யுங்கள்

பிடித்தமானவர்களை இழந்து தவித்து வாடும் குடும்பத்தினருக்கு, அதே சமயம் நிதி ரீதியிலும் பிரச்சனை என்றால், அதனை நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்றாகத் தான் உள்ளது. ஆக எப்போதுமே உங்கள் நிதி ரீதியிலான திட்டங்களில் தெளிவாக நாமினிக்களை அப்டேட் செய்யலாம். குடும்பத்தில் யாரேனும் ஒருத்திரடமாவது அனைத்து விவரங்களையும் கூறி வைக்கலாம். அது டெபாசிட்களாகட்டும், முதலீடு, இன்சூரன்ஸ், சொத்துகள் என பலவற்றிலும். இது பிற்காலத்தில் உங்களது அன்பான குடும்பத்தினருக்கு உதவும்.

எப்படி மேற்கொள்வது?

எப்படி மேற்கொள்வது?

துரதிஷ்டவசமாக உங்களுக்கு பிடித்தவமானவர்கள் இறந்துவிட்டால், நிதி ரீதியிலான அடுத்தடுத்த செயல்பாடுகளை எப்படி மேற்கொள்வது? அடுத்து என்ன செய்வது? குறிப்பாக மியூச்சுவல் பண்ட், பங்குகள், பிஎஃப், பிபிஎஃப், பிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட், தங்கம், வீட்டுக் கடன், தனி நபர் கடன், கார் லோன், இன்சூரன்ஸ் க்ளைம், பிசினஸ், வேலை, வருமான வரி, பல்வேறு இணைப்புகள் (மின்சார, தண்ணீர் கட்டணம், போன் பில்) என பலவற்றையும் பார்க்க வேண்டியுள்ளது.

பங்குகளை என்ன செய்யலாம்?

பங்குகளை என்ன செய்யலாம்?

இறந்த உங்களது குடும்பத்தாரின் பெயரில் பங்குகள் இருந்தால், அதனை நாமினி டிரான்ஸ்மிஷன் பார்ம், அதனுடன் இறப்பு சான்றிதழ், நோட்டரி பப்ளிக் இடம் ஒரு கையெப்பம் வாங்கி கொடுக்க வேண்டும். ஒரு வேளை நாமினி இல்லையெனில் சட்டபூர்வ வாரிசுகள் தக்க ஆவணங்களை கொடுத்து பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். தற்போதைய காலகட்டங்களில் நாமினி என்பது கட்டாயமானதாக உள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டினை பொறுத்தவரையில், நாமினி AMCக்களை தொடர்பு கொண்டு, டிரான்மிஷன் பார்ம், இறப்பு சான்றிதழ், கேஓய்சி சம்பந்தமான ஆவணங்கள், பான், ஆதார் மற்றும் கேன்சல் செக் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு வேளை நாமினி நியமிக்கபடவில்லை என்றால், சட்டபூர்வ வாரிசு தாரர்கள் முதலீடுகளை உரிமை கோருவதற்கு நடைமுறைகள் உள்ளன.

டிஜிட்டல் தங்கம்

டிஜிட்டல் தங்கம்

பங்கு சந்தையினை போலவே டிஜிட்டல் தங்கத்தினை மாற்றிக் கொள்ளலாம். இதே பிசிகல் தங்கம் எனில் அதனை வாரிசுதாரர்கள் இன்னும் எளிதாக சட்டபூர்வ வாரிசுகள் மாற்றிக் கொள்ள முடியும். இன்றைய காலகட்டத்தில் பிசிகல் தங்கத்திற்கு பதிலாக எம்சிஎக்ஸில் தங்கமாக வாங்கி வைக்கின்றனர். தங்க ஃபண்டுகள், தங்க பத்திரம், தங்கம் இடிஎஃப் என பலவற்றிலும் முதலீடு செய்கின்றனர்.

வருங்கால வைப்பு நிதியை எப்படி எடுப்பது?

வருங்கால வைப்பு நிதியை எப்படி எடுப்பது?

ஊழியரின் சட்டபூர்வமான வாரிசு பார்ம் 20ஐ பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் EPF அலுவலகத்தில், பணிபுரிந்த நிறுவனத்தின் மூலம் கொடுக்க வேண்டும் .

இந்த ஆவணங்களில் கேன்சல் செக்லீப், இறப்பு சான்றிதழ், படிவம் 5, படிவம் 10டி, படிவம் 10சி ஆகியவற்றை கொடுக்க வேண்டியிருக்கும். உங்களது க்ளைம் நிலையை இபிஎஃப் இணையத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

அஞ்சலக பொது வருங்கால வைப்பு நிதி

அஞ்சலக பொது வருங்கால வைப்பு நிதி

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகம் விரும்பும் முதலீட்டு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதியும் ஒன்று. இதற்காக நாமினி இறப்பு சான்றிதழ், பார்ம் G, பாஸ்புக் நகல் என சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். இது பரிசீலிக்கப்பட்டு பின்னர் பரிமாற்றம் செய்யப்படும்,

வங்கி கணக்கு அல்லது டெபாசிட்

வங்கி கணக்கு அல்லது டெபாசிட்

வங்கிக் கணக்கில் சேமிப்பு அல்லது பிக்ஸட் டெபாசிட் செய்திருக்கும் பட்சத்தில், ஜாய்ன்ட் அக்கவுண்ட் ஹோல்டராக இருந்தால் இறப்பு சான்றிதழ் போதுமானது. அப்படி இல்லை எனில் KYC ஆவணங்கள் நாமினி ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும். இதன் பிறகே நீங்கள் தொகையை எடுக்க முடியும்.

சொத்துகள்

சொத்துகள்

சொத்துகளை மாற்ற ஏதும் உயில்கள் எழுதப்பட்டிருந்தால் தக்க ஆவணங்களை கொடுத்து மாற்ற வேண்டும். அப்படி ஏதேனும் ஆவணங்கள் இல்லை எனில், இதே சட்ட பூர்வ வாரிசுகள் தேவையான இறப்பு சான்றிதழ் மற்றும் சட்ட வாரிசுகளிடமிருந்து ஒரு பிரமாணப் பத்திரையும், என்ஓசியையும் சமர்பிக்க வேண்டியிருக்கும். மேலும் உங்கள் சொத்துகளை மாற்றம் செய்யும் கையோடு, மின்சார வாரியம், தண்ணீர் கட்டண ரசீதுகளில் பெயரை மாற்ற வேண்டும். இதே போல வாகனங்கள் உரிமையை மாற்றுவதை தவிர, காப்பீட்டுக் கொள்கையை மாற்ற வேண்டும்.

நிலுவையில் கடன்

நிலுவையில் கடன்

அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால் அவர் வாங்கியிருக்கும் வீட்டுக் கடன், கார் கடன், தனி நபர் கடன் பற்றிய கேள்வி எழும். சம்பந்தபட்டவர் இறந்து விட்டால் நிறுவனம் அல்லது வங்கிகள் நிலுவை கடனை திரும்ப செலுத்த கேட்கும். அப்படி இல்லையெனில் உடைமைகளை அல்லது சொத்துக்களை ஏலம் விடும். பொதுவாக இது போன்ற சிக்கல்களை தவிர்க்க இன்றைய கால கட்டத்தில் இன்சூரன்ஸ் திட்டங்கள் உள்ளன.

இன்சூரன்ஸ் க்ளைம்

இன்சூரன்ஸ் க்ளைம்

இன்சூரன்ஸ் திட்டங்களில் பாலிசிதாரர் இறந்து விட்டால், இறப்பு சான்று மற்றும் கேஓய்சி ஆவணங்கள், இன்சூரன்ஸ் சம்பந்தமான ஆவணங்கள் (வாகன இன்சூரஸ் எனில் ஆர்சி புக், லைசெக்ஸ்) என பலவும் கொடுக்க வேண்டியிருக்கும். இதனை தற்போது சில நிறுவனங்கள் ஆன்லைனில் செயல்படுத்துகின்றன. எனினும் பெரும்பாலான நிறுவனங்கள் அலுவலகத்திற்கு சென்று தேவையான பிசிகல் ஆவணங்களை கொடுக்க வேண்டியிருக்கும். இதற்கு சில மாதங்கள் ஆகலாம். விபத்து பாலிசியில், ஒரு வேளை பாலிசிதாரர் இறந்து விட்டால், மருத்துவமனை அறிக்கை மற்றும் எஃப்ஐஆர் காப்பி, போஸ்ட் மார்டம் செய்த ஆவணம் தேவைப்படும். இதே மற்ற இன்சூரன்ஸ் திட்டங்களில் சம்பந்தட்ட ஆவணங்களை கொடுத்தால் போதுமானது.

செலவுகளையும் கவனிங்க

செலவுகளையும் கவனிங்க

மாநகராட்சி கட்டணங்கள், மின்சார கட்டணங்காள், போன் பில்கள், இணைய கட்டணம், ஜிம் கட்டணங்கள், ஆன்லைன் சந்தாதாரர்கள் (நெட்பிளிக்ஸ் மற்றும் ஓடிடி), கிரெடிட் கார்டு உள்ளிட்ட கட்டணங்களை முன் கூட்டியே தெரிந்து கொண்டு தவிர்க்கலாம். இது பற்றி தெரிந்து கொள்ள மெயில்கள், மொபைல் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஆவணங்கள் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Assets, loans and insurance claims: issues sort out if you lose a loved one

Coronavirus impact.. Assets, loans and insurance claims: issues sort out if you lose a loved one
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X