இந்தியா பொருளாதாரம் படு வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், அடுத்து வரும் காலாண்டுகளிலாவது நிலைமை சீரடையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில், அசோசெம் அமைப்பு நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி 12% இருக்க வேண்டும். அப்போது தான் இந்தியாவின் தற்போதைய நிலைமை சீரடையும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான அசோசெம் அமைப்பு, இந்தியா பணப்புழக்க பிரச்சனை மற்றும் தேவை குறைவு உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறது.
மேலும் நுகர்வை உயர்த்த வழிவகை செய்யப்பட வேண்டும். இது தவிர ஜிஎஸ்டி விகிதத்தினையும், தனி நபர் வருமான வரி மற்றும் மேம்பட்ட கடன் ஓட்டம் உள்ளிட்டவற்றை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அசோசெம் கருத்து தெரிவித்துள்ளது.
இரண்டு இலக்க வளர்ச்சி காண வேண்டும்
மேலும் பொருளாதாரம் வளர்ச்சி காணும் போது இந்த பற்றாக்குறை அனைத்தும் காணாமல் போகும் என்றும் அசோசெம் தலைவர் நிரஞ்சன் ஹிராநந்தினி தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இந்திய பொருளாதாரம் இருக்கும் நிலையில், இரண்டு இலக்க வளர்ச்சி காண வேண்டும். அதிலும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் கண்டுள்ள வளர்ச்சியை ஈடுகட்ட 12 சதவிகிதமாக வளர்ச்சி காண வேண்டும் என்றும் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
பெரிதும் பயன் அடையவில்லை
இவ்வாறு இரண்டு இலக்க வளர்ச்சியை பொருளாதாரம் எட்டும்போது, முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சீனா வர்த்தக போர் பிரச்சனையினால் இந்தியா பெரிதும் பயனடையவில்லை. ஆனால் இந்தியாவோடு ஒப்பிடும்போது மற்ற நாடுகள் நல்ல பலன் கண்டுள்ளன என்றும் நிரஞ்சன் கூறியுள்ளார்.
கடன் வழங்குவது குறைந்தது
கடந்த 2016ம் ஆண்டில் வங்கிகள் கடன் வழங்குவதை நிறுத்திய பிறகு, அதிலும் குறிப்பாக 2106ம் ஆண்டுக்கு பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பொருளாதாரத்தில் பணப்புழக்கம் குறைந்து விட்டது என்றும் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். அதிலும் சிறு குறு நிறுவனங்கள் மற்றும் பில்டர்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்களுக்கும் கடன் கிடைக்கவில்லை. இதனால் இவற்றை சேமிக்க கட்டாய வேண்டிய நிலை உள்ளது.
ஜிடிபி வளர்ச்சி
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஜிடிபி விகிதம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் இதனை மேம்படுத்தும் பொருட்டு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கார்ப்பரேட் வரி குறைப்பு, பொதுத்துறை வங்கிகளுக்கு 70,000 கோடி ரூபாய் மறுமூலதனம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வங்கிகள் கடன் கொடுக்கும் விகிதமும் அதிகரித்துள்ளது. எனினும் அரசு தேவையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிரஞ்சன் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு
நடப்பு நிதியாண்டில் மட்டும் 5 முறை 135 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைப்பை செய்துள்ளது ரிசர்வ் வங்கி. இந்த நிலையில் இந்த நடவடிக்கையானது போதுமான வளர்ச்சியை காணவில்லை. இதே நேரம் வேலைவாய்ப்பில் முன்னணியில் உள்ள துறைகளில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் ஊழியர்கள் பயப்படுவதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக உள்கட்டமைப்பு, ஜவுளி, சுற்றுலா, மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறைகள் உள்ளிட்ட வேலை வாய்ப்பை பெருக்கும் துறைகள் நலிவடைந்துள்ளன. இத்துறைகளும் ஜிடிபி வளர்ச்சியை பெருக்கும் என்பதால்;, இத்துறைகள் சீரடையும்போது ஜிடிபி வளர்ச்சி காண வாய்ப்புள்ளது என்றும் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications