சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தற்போது GCC நிறுவனங்களை ஈர்க்கும் முக்கியமான நகரமாக உயர்ந்துள்ளது, பெங்களூர், ஹைதராபாத் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் GCC அலுவலகங்களை ஈர்த்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் நாட்டின் பிரபல பார்மா நிறுவனமான AstraZeneca சமீபத்தில் பிற வெளிநாட்டு நிறுவனங்களைப் போலவே தமிழ்நாட்டில் இருக்கும் திறமையான ஊழியர்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் தனது டெக்னாலஜி சென்டரை சென்னையில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது.

சமீபத்தில் குவால்காம் உட்பட பல சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் தனது புதிய டெக்னாலஜி சென்டரை சென்னையில் திறந்த நிலையில் தற்போது பிரிட்டன் பயோடெக் நிறுவனமான AstraZeneca தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
உலகளவில் மருந்து தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் அஸ்ட்ராஜெனெகா-வின் (AstraZeneca) இந்திய கிளை நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா இந்தியா பிரைவேட் லிமிடெட் (AZIPL), சென்னையில் உள்ள தனது குளோபல் இன்னோவேஷன் மற்றும் டெக்னாலஜி சென்டரை (Global Innovation and Technology Centre - GITC) விரிவுபடுத்த 250 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம், சென்னை அலுவலகத்தில் இருந்து அதன் இன்னோவேஷன் திறனை மேம்படுத்துதல், செயல்திறனை அதிகரிப்பது மற்றும் நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளை மேம்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இந்த முதலீட்டின் மூலம் சுமார் 1,300 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிகிறது.
சென்னை, கிண்டியில் AstraZeneca நிறுவனத்தின் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட அலுவலக வசதிக்கான தொடக்க விழாவில், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இந்தியாவுக்கான பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் கிறிஸ்டினா ஸ்காட் சிஎம்ஜி, மற்றும் அஸ்ட்ராஜெனெகாவின் ஆசிய பிராந்திய துணைத் தலைவர் சில்வியா வரேலா ஆகியோர் முன்னிலையில் துவக்க விழா நடைபெற்றது.
AstraZeneca-வின் முதலீட்டு அறிவிப்பு, இந்நிறுவனம் இந்தியாவில் 45 ஆண்டுகளை நிறைவு செய்து வரும் இதே மாதத்தில் வந்துள்ளது. 2025ஆம் ஆண்டிற்குள் விரிவாக்கப்பட்ட GITC அலுவலகம் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையின் மூலம் இந்நிறுவனத்தின் தொழில்நுட்ப தளம் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AstraZeneca தற்போது ராமானுஜன் ஐடி சிட்டியில் உள்ள 3.34 லட்சம் சதுர அடி அலுவலக இடம், அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 1.8 லட்சம் சதுர அடி விரிவடைந்து இந்தியாவின் அதன் மிகப்பெரிய GCC ஆக மாறும். GITC அலுவக ஊழியர்களின் எண்ணிக்கை 4,000 ஆக அதிகரிக்க உள்ளது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications