பிரிட்டன் நாட்டின் பிரபல பார்மா நிறுவனமான AstraZeneca சமீபத்தில் பிற வெளிநாட்டு நிறுவனங்களைப் போலவே தமிழ்நாட்டில் இருக்கும் திறமையான ஊழியர்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் தனது டெக்னாலஜி சென்டரை சென்னையில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது.
சென்னை தற்போது GCC நிறுவனங்களை ஈர்க்கும் நகரமாக உயர்ந்துள்ளது, பெங்களூர், ஹைதராபாத் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் GCC அலுவலகங்களை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் குவால்காம் தனது புதிய டெக்னாலஜி சென்டரை திறந்த நிலையில் தற்போது பிரிட்டன் பயோடெக் நிறுவனமான AstraZeneca தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.

தற்போது 2700 பேர் பணியாற்றும் சென்னை அலுவலகத்தை அடுத்த 2 வருடத்தில் 30 சதவீதம் அதிக ஊழியர்கள் கொண்ட அலுவலகமாக மாற்ற திட்டமிட்டு விரிவாக்க பணிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான 3 நாட்களில் கனடா நிறுவனத்தை வாங்கியுள்ளது AstraZeneca.
அடுத்த தலைமுறை புற்றுநோய்க்கான சிகிச்சைகளில் கவனம் செலுத்தும் திட்டத்துடன் பிரபல மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனம், கனடாவைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃப்யூஷன் ஃபார்மாசூட்டிகல்ஸ்-ஐ சுமார் 2 பில்லியன் டாலருக்கு பணமாக கொடுத்து வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம், ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திற்கு ரேடியோ ஃபார்மாசூட்டிகல் மருந்துகள் பிரிவில் கால் பதிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டில், நோவார்டிஸ் நிறுவனத்தின் இந்த மருந்து சிகிச்சை மூலம் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்வாழ்வை நீட்டிக்க முடியும் என்று கண்டறியப்பட்டதில் இருந்து இந்த சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகின்றனர்.
நோவார்டிஸின் மருந்து 2022 இல் அங்கீகரிக்கப்பட்டது, அதன் பிறகு இந்த துறையில் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், எலி லில்லி நிறுவனம் Point Biopharma நிறுவனத்தை 1.4 பில்லியன் டாலருக்கும், Bristol Myers Squibb நிறுவனம் RayzeBio நிறுவனத்தை 4.1 பில்லியன் டாலருக்கு கடந்த ஆண்டு கையகப்படுத்தியுள்ளன.
இந்த கொள்முதல் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications