ஒரு பெரிய வெற்றிக் கதை பெரும்பாலும் சிறிய, கிட்டத்தட்ட கவனிக்கப்படாத ஒரு ஐடியாவில் இருந்து தான் தொடங்குகிறது. அப்படி தான் அஸ்ட்ரோடாக் ஸ்டோரின் (Astrotalk Store) விஷயத்திலும் நடந்ததுள்ளது. வெறும் ரூ.30 லட்சம் என்ற சிறிய தொகையை அடிப்படையாக கொண்டு ஒரு எளிய சோதனை திட்டமாக துவங்கி இன்று மாபெரும் வெற்றியாக மாறியுள்ளது.
பல்வேறு கேள்விகள், குழப்பங்கள் மத்தியில் தொடங்கிய இந்த பயணம், வெறும் 12 மாதங்களில் எதிர்பார்ப்புகளை மீறிய வெற்றியைப் பெற்றது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Astrotalk என்பது ஆன்லைன் ஜோதிட தளமாகும். இத்தளம் மக்கள் ஆன்லைன் மூலம் ஜோதிடர்களுடன் வாய்ஸ் மற்றும் சாட் வாயிலாக தொடர்புகொள்ள உதவுகிறது.

நொய்டாவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அஸ்ட்ரோடாக்கின் டிஜிட்டல் ஜோதிட ஆலோசனை சேவையின் நீட்டிப்பாக தொடங்கப்பட்டது தான் இந்த அஸ்ட்ரோடாக் ஸ்டோர்.
அஸ்ட்ரோடாக் ஸ்டோர் உருவாக காரணம்:
Astrotalk நிறுவனம் பல ஆண்டுகளாக ஒரு முக்கிய போக்கை தனது வணிகத்தில் கவனித்து வந்தது. ஆன்லைனில் ஜோதிடர்களை அணுகும் லட்சக்கணக்கான மக்கள் வெறும் ஆலோசனை மட்டுமல்லாமல், அவர்கள் பரிந்துரைக்கும் ஆன்மீக பொருட்களை எங்கு வாங்குவது என்று தேடி அலைவதை கவனித்தனர்.
இந்த இந்தியாவில் சந்தை பெரியதாக இருந்தாலும் ஒழுங்கற்றதாகவும், நம்பகத்தன்மை இல்லாததாகவும் இருந்தது. இதேபோல் தர நிர்ணயம் இல்லாதது, ஆன்லைன் விற்பனையாளர்களிடம் நம்பிக்கையின்மை இப்பிரிவில் பெரிய பிரச்சனையாக இருந்தது. இதற்காக தீர்வாக தான் Astrotalk Store என்ற ஈகாமர்ஸ் தளம் உருவாக்கப்பட்டது, இத்தளத்தில் ஆன்மீகம் தொடர்பான பல்வேறு பொருட்கள் விற்கப்படுகிறது.
மக்களின் தேடலுக்கும், பொருட்களின் நம்பகதன்மைக்கும் மத்தியில் இருக்கும் வர்த்தக இடைவெளியை புதிய பிஸ்னஸ் வாய்ப்பாக பார்த்த அஸ்ட்ரோடாக், இப்பிரிவு சேவைகளை ஒழுங்கமைக்க முடிவு செய்தது. ஜோதிடர் வழிகாட்டுதல் ஆலோசனை உடன் கலந்து, மக்களுக்கு தேவையான உண்மையான பொருளை நேரடியாக கொள்முதல் செய்தல் மற்றும் அதன் தரம், நம்பகமான டிஜிட்டல் பிராண்ட் ஆகியவற்றை இணைத்து அஸ்ட்ரோடாக் ஸ்டோர் உருவானது. இந்தியாவின் கலாச்சாரத்தில் ஜோதிடம், ஆன்மீகம் கலந்து, ஒன்றியிருந்தாலும், வணிக ரீதியாக ஒழுங்கற்றதாக இருந்தது.

ஈகாமர்ஸ் - ஆர்டர்கள் நம்பிக்கையாக மாறியது:
அஸ்ட்ரோடாக் ஸ்டோர் முதலில் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படவில்லை, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து நம்பிக்கையின் அடிப்படையில் மீண்டும் மீண்டும் இத்தளத்தில் வாங்குவது மூலம் பெரும் வர்த்தகத்தை உருவாக்கியது. ஆர்டர்கள் நம்பிக்கையாக மாறியது.
இந்த வர்த்தக மாடல் சந்தையில் பொருத்தமாக இருப்பதை கண்ட அஸ்ட்ரோடாக் இதில் தீவிரமாக இறங்கியது. இப்பிரிவுக்காக ரூ.40 கோடி கூடுதல் முதலீட்டை செலுத்தி பொருட்கள் வாங்குவது, சப்ளை செயினை வலுப்படுத்துதல், தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, பொருள் வகைகளை அதிகரிப்பது, மார்க்கெட்டிங் செலவை அதிகரித்தது.
வர்த்தக அளவு:
2025-ஆம் ஆண்டில் மட்டும் அஸ்ட்ரோடாக் ஸ்டோர் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்றுள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.140 கோடி வருவாய் ஈட்டியது. வருடாந்திர அளவிலான ரன் ரேட் ரூ.200 கோடிக்கு மேல் சென்றது - அறிமுகமான 12 மாதங்களுக்குள் இந்த சாதனை நிகழ்ந்தது அஸ்ட்ரோடாக் ஸ்டோர்.
அஸ்ட்ரோடாக் ஸ்டோர் நீண்டகால வர்த்தகத்திற்காக கட்டமைக்கப்பட்டு வருகிறது. 300-க்கும் மேற்பட்ட பொருட்கள் உதாரணமாக ருத்ராட்சம், ரத்தினக் கற்கள், பிரேஸ்லெட், சிலைகள், பூஜை பொருட்கள் என ஒரு முறை மட்டும் வாங்கும் பொருட்களை தாண்டி தினசரி பயன்பாட்டு மற்றும் மீண்டும் வாங்கும் பொருட்களை நோக்கி நகர்ந்து வருகிறது. 2027ஆம் நிதியாண்டுக்குள் 500-க்கும் மேற்பட்ட புதிய பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

சக்சஸ் ஃபார்மூலா:
தற்போது அஸ்ட்ரோடாக் ஸ்டோர் 24% ரீபீட் வாடிக்கையாளர் விகிதத்தை பெற்றுள்ளது. வரும் காலத்தில் இத்தளத்தின் விற்பனையில் பாதிக்கு மேல் Tier 2 மற்றும் Tier 3 நகரங்களிலிருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த வணிகம் மெட்ரோ நகரங்களை தாண்டி சிறு நகரங்களுக்கும் செல்ல உள்ளது.
அஸ்ட்ரோடாக் நிறுவனர் புனித் குப்தா இதுக்குறித்து கூறுகையில் "ஆன்மீக பொருட்கள் சந்தை எப்போதுமே பெரியதாகவே இருந்து வருகிறது , ஆனால் அவை Organized சந்தையாக இல்லை. அஸ்ட்ரோடாக் ஸ்டோர் அதை மாற்றுவதற்காகவே உள்ளது." என தெரிவித்தார்.
அஸ்ட்ரோடாக் நிறுவனத்தின் சீஃப் பிசினஸ் ஆபிசர் தமன் சோனி நீண்டகால பார்வையை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வருவாய் மட்டும் இல்லாமல், நிலையான வளர்ச்சி, அதிக ஆர்டர் மதிப்பு, தொடர்ந்து வளரும் ஆக்டிவ் பையர் எண்ணிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார். 2027ஆம் நிதியாண்டுக்குள் இத்தளத்தில் வருவாய் ரூ.400-500 கோடி என்ற இலக்கு வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் அஸ்ட்ரோடாக் 2025-ல் மொத்தமாக ரூ.1,176 கோடி வருவாயை தாண்டியுள்ளது. வெறும் ரூ.30 லட்சம் சோதனை திட்டத்தில் இருந்து 12 மாதங்களில் ரூ.140 கோடி வெற்றிக் கதையாக மாறியுள்ளது அஸ்ட்ரோடாக் ஸ்டோர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications