டிராகன் திரைப்பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தன்னுடைய அடுத்த படத்திற்கு உதவி இயக்குனர்கள் தேவைப்படுவதாக வெளியிட்ட விளம்பரத்தை தொடர்ந்து 15000 பேர் அதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் இளம் இயக்குனரான அஸ்வத் மாரிமுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவருடைய இரண்டாவது படமாக டிராகன் அண்மையில் வெளியாகி மெகா ஹிட் ஆக மாறி இருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் ஆகி அஸ்வத் மாரிமுத்துவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்துள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த் ,விஜய் உள்ளிட்ட பலரும் அஸ்வத் மாரிமுத்து மற்றும் டிராகன் பட குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் அஸ்வத் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்னர் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார். அதில் தன்னுடைய அடுத்த படத்திற்கு உதவி இயக்குனர்கள் தேவை என்றும் அதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதில் பரிந்துரை அடிப்படையில் யாரையும் தேர்வு செய்ய மாட்டோம் ,உங்களுடைய ரெஸ்யூம் மற்றும் ஒரு பக்க காட்சி பதிவு , நேர்காணல் ஆகிய மூன்று அடிப்படையில் உதவி இயக்குனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
உதவி இயக்குனராக வரக்கூடிய நபர் அடுத்த ஓராண்டு காலத்திற்கு தன்னுடன் கட்டாயம் பணிபுரிய வேண்டி இருக்கும் என்பதையும் குறிப்பிட்டு இருந்தார். இந்த உதவி இயக்குனர் வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஏப்ரல் ஏழாம் தேதி கடைசி நாள் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அஸ்வத் மாரிமுத்து உதவி இயக்குனர் தேவை என வெளியிட்ட பதிவுக்கு 15,000 பேர் தங்களுடைய ரெஸ்யூம்களை அனுப்பி உள்ளனர். 10 பேரை மட்டுமே வேலைக்கு தேர்வு செய்ய வேண்டும் என எண்ணி இருந்தேன் ஆனால் இத்தனை ஆயிரம் விண்ணப்பங்களை கண்டு தற்போது நான் என் முடிவை மாற்றி விட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
அதாவது தான் அடுத்ததாக இயக்க இருக்கும் இரண்டு திரைப்படங்களுக்கும் தலா 10 உதவி இயக்குனர்கள் என மொத்தம் 20 பேரை பணிக்கு தேர்வு செய்வதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த உதவி இயக்குனர்கள் தேர்வு நடைமுறை மிகவும் நியாயமான முறையில் நடைபெறும் என அவர் கூறியுள்ளார். 15000 பேரின் ரெஸ்யூம்களுமே ஒரே மாதிரியாகத்தான் பார்க்கப்பட்டு தேர்வு செய்யப்படும் என ஒரு கூறி இருக்கிறார். விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த தேர்வு நடைமுறைக்கும் சிறிது காலம் தேவைப்படுகிறது அதுவரை காத்திருக்க வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications