அமெரிக்காவில் பணிபுரியும் குர்கானைச் சேர்ந்த 29 வயதான ஒரு தொழில்நுட்ப வல்லுநர் நிதி சுதந்திரம் குறித்து ரெடிட் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு, கடந்த 16 மாதங்களில் அவரது வாழ்க்கை எப்படி முழுமையாக மாறியது என்பதை விளக்குகிறது.
அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் அந்த இளைஞர், தனது 2 கோடி ரூபாய் நிகர மதிப்பு இலக்கை எதிர்பார்த்ததை விட சற்று சீக்கிரமாகவே அடைந்ததாக கூறியுள்ளார். "இது ஒரு ரோலர் கோஸ்டர் பயணம்" என்றும் அவர் வர்ணித்துள்ளார். குறிப்பாக, அமெரிக்க சந்தைகளின் எழுச்சி இதற்கு உதவியதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அதிக சம்பளத்தால் சேமிப்பு தானாக இரட்டிப்பாகவில்லை. அமெரிக்காவில் அதிக வாடகை மற்றும் வாழ்க்கை செலவுகளால், இந்தியாவில் இருந்ததை விட அவரது மாதச் சேமிப்பு சிறிதளவு மட்டுமே அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு அப்பால், ஒரு தனிப்பட்ட நெருக்கடி அவரது வாழ்க்கையை மாற்றியுள்ளது. அவருக்கு மிகவும் நெருக்கமான ஒருவருக்கு ஏற்பட்ட கடுமையான உடல்நலப் பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம், 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிலையில், ஒரு மருத்துவ ஆலோசனைக்கு ரூ.500 பணம் கூட இல்லாமல் வீட்டிற்கு திரும்பியதை அவர் நினைவு கூர்ந்தார்.
இப்போது, அவர் கடனில்லாமல் ஆரோக்கியத்திற்காக ஒரு கோடி ரூபாயை கூட மகிழ்ச்சியுடன் செலவிடுவேன் என்றும், இதுவே தனக்கு உண்மையான நிதிப் பாதுகாப்பு என்றும் உணர்ந்ததாக பகிர்ந்துள்ளார். செல்வத்தை உருவாக்கிய அதேசமயம், கடந்த 16 மாதங்களில் சுமார் ரூ.25 லட்சம் செலவழித்து பயணம் செய்துள்ளார். மேலும், இந்த நினைவுகளை விலைமதிப்பற்றவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாழ்க்கை குறுகியது, அந்த அனுபவங்களை எதற்காகவும் நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.
தற்போது, இவரது முதலீடுகளில் சுமார் 30% அமெரிக்கப் பங்குகளில் உள்ளன. ஆனால், நிதி எண்களை விட, அவரது மிகப்பெரிய தத்துவம் இதுதான். "பணம் நிலைத்தன்மையைக் கொடுக்கும். அதிகம் சம்பாதியுங்கள். அதிகம் சேமியுங்கள். ஆனால் வாழுங்கள். உங்களால் வாழ முடியும்போதே வாழுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமே முதல் இலக்கு : தற்போது ஆரோக்கியம்தான் தனது முதன்மையான முன்னுரிமை என்றும், சமீபத்தில் 8 கிலோ எடை குறைத்ததால் முன்பை விட அதிக ஆற்றலுடன் உணர்வதாகவும் அவர் கூறினார். இந்த அனுபவம், எதிர்காலத்தில் தனது தொழில் இலக்கையும் மாற்றியுள்ளது. ஸ்டார்ட்அப் அல்லது AI போன்ற குழப்பங்களிl இருந்து விலகி, தனது எதிர்காலத்தை சுகாதாரத் துறையில் அர்ப்பணிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அடுத்தகட்ட வாழ்க்கை என்பது, பணத்தை வளர்ப்பதல்ல, மாறாக நேரத்தை திரும்ப வாங்குவது. அதாவது அனுபவங்கள், ஆரோக்கியம் மற்றும் நோக்கத்திற்காக முதலீடு செய்வது என்று அவர் நம்புகிறார்.
சேமிப்பு ரகசியம் : இதற்கிடையே, பயனர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், மாணவர் கடன்களை அடைத்த பிறகு, தனது முதல் ஒரு கோடி ரூபாயை சேமிக்க 3 ஆண்டுகளும், அடுத்த ஒரு கோடி ரூபாயை அடைய 16 மாதங்களும் ஆனதாக கூறியுள்ளார். அவரது தற்போதைய மாத சேமிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும். அமெரிக்கா அதிக வருமானம் அளித்தாலும், அதிக வரி மற்றும் செலவுகளையும் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications