இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி தான் நிதா அம்பானி. இவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மட்டுமல்லாமல் ஆரோக்கியம் மற்றும் சுய கவனிப்பின் மீதும் ஆர்வம் கொண்டவர் ஆவார். சர்வதேச மகளிர் தினமான இன்று உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு வலிமை, சுய கவனிப்பு மற்றும் நல்வாழ்வு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில், செயல்பட்டு வருகிறார்.
61 வயது என்றால் பலரும் ஓய்வெடுக்கும் நேரம் என்று கருதும் நிலையில்.. நிதா அம்பானி இந்த வயதிலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறார். வயது என்பது வெறும் நம்பர் என்பதை உணர்ந்து வாழ்ந்து வருகிறார். 50 வயதை கடந்து விட்டால்.. வயதாகிவிட்டது என்று நினைப்பவர்களுக்கும் இவர் ஒரு உத்வேகமாக செயல்படுகிறார் என்றால் அதில் ஐயமில்லை. எந்த வயதிலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தொடங்கலாம் என்பதை நமக்கு வலியுறுத்துகிறார்.

பிட்னஸ் ரோட்டின்: நிதா அம்பானி தனது 6 வயதிலிருந்தே பரதநாட்டியம் கற்று வருகிறார். இந்த பாரம்பரிய நடனம் அவருடைய உடலுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. பரதநாட்டியம் உடல் மற்றும் மனதை ஒருங்கிணைக்கும் ஒரு கலை. அதோடு தினசரி அடிப்படையில் பல்வேறு உடற்பயிற்சியும் செய்து வருகிறார்.
கால்களை வலுப்படுத்தும் விதமாக லெக்டே ஒர்க் அவுட்டுகள், அப்பர் பாடி ஸ்ட்ரென்த் ட்ரைனிங் போன்றவற்றையும் செய்கிறார், இதை தவிர மனதை அமைதிப்படுத்தும் விதமாக யோகா பயிற்சியும் செய்கிறார், சில நேரங்களில் உடற்பயிற்சி முறையை சுவாரசியமாக வைத்திருக்கும் வகையில் ஆக்குவா வொர்க் அவுட் என்று சொல்லப்படுகிற நீரில் அமர்ந்து உடற்பயிற்சி செய்யும் முறைகளையும் கடைபிடிக்கிறார்.
இவர் செய்யும் நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி வெளியூர் செல்லும் நாட்களிலும் நின்று போவதில்லை. நடைபயிற்சி அவருடைய பயணங்களின் போதும் தொடர்கிறது. ஒருவேளை வெளியூருக்கு செல்லும் அவசியம் ஏற்பட்டாலும் அங்கும் இந்த உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருகிறார். ஒரு நாளைக்கு 5000 முதல் 7000 ஸ்டெப்ஸ் நடக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு இவர் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். இவர் சைவ உணவை மட்டுமே விரும்பி சாப்பிடுகிறார். பொதுவாக இன்றைய டாக்டர்கள் கூறும் அறிவுரைக்கேற்ப சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகளை முற்றிலுமாக தவிர்த்துள்ளார். ஒவ்வொரு பெண்ணும் தங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் தங்களுக்கு நேரம் ஒதுக்கவும் நிதா வலியுறுத்துகிறார்.
இந்த மகளிர் தினத்தில் நிதா அம்பானி பெண்களுக்கு வழங்கிய முக்கியமான அறிவுரை என்றால் சிறிய அளவில் தொடங்க வேண்டும் என்பதுதான். சிறிய அளவில் தொடங்கி சீராக செயல்பட வேண்டும். "வாரத்திற்கு நான்கு முறை உங்கள் நல்வாழ்வுக்காக 30 நிமிடங்களை அர்ப்பணிங்கள். நான் 61 வயதில் செய்ய முடிந்தால் நீங்களும் செய்யலாமே!", என்று கூறியுள்ளார். பெண்கள் தமக்கும் தங்கள் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications