மத்திய அரசு மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தில் ஒன்று தான் இந்த "அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana - APY)" திட்டம். இத்திட்டத்தின் கீழ் ஒருவரின் முதலீட்டைப் பொறுத்து மாதம் ரூ. 5000 வரை பென்ஷனாகப் பெற முடியும். அனால் தற்போது இந்த திட்டத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான குறைந்தபட்ச தொகையை இரட்டிப்பாக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடல் பென்ஷன் யோஜனா திட்டம் என்றால் என்ன?: APY திட்டம் 2015-ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி அப்போது தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பயன்படுத்தி ஒருவர் ஓய்வு காலத்திற்கு தேவையான வருமானத்தை பெற முடியும். இந்திய குடிமகன் அனைவரும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

18 வயது முதல் 40 வயது வரையிலான யார் வேண்டுமானாலும், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த திட்டத்தின் கீழ் இணைந்த ஒவ்வொரு நபரும் அவரின் முதலீட்டின் அடிப்படையில் குறைந்தது மாதம் ரூ. 1,000-த்திலிருந்து அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை பென்ஷன் பெற முடியும்.
இந்த ரூ. 5,000 வரம்பை தான் 10,000 ரூபாயாக மாற்றுவது குறித்து அரசு தற்போது பரிசீலித்து வருகிறது. ரூ. 1000 ரூபாய் பென்ஷன் பெற வேண்டும் எனில் அதற்கான முதலீடு அதிகமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வெறும் ரூ. 42 ரூபாயிலிருந்து உங்களால் சேமிக்க முடியும்.
வயதானவர்களுக்கு நிதி பாதுகாப்பு வழங்குவதைக் கருத்தில் கொண்டு, இது போன்ற ஒரு யோசனை மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 23-ஆம் தேதிக்குப் பிறகு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டிற்கு முன்னதாகவே இது குறித்து முடிவு எடுக்கப்படுமா? அல்லது பட்ஜெட்டுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? என்பது தெரியவில்லை.
ஜூன் 20, 2024 நிலவரப்படி, அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் மொத்தமாக 6.62 கோடி பேர் இணைந்துள்ளனர், 2023-24 ஆம் ஆண்டில் 1.22 கோடி புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
அடல் பென்ஷன் திட்டத்தை மேலும் சிறப்பானதாக மாற்றுவதற்காக சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் உத்தரவாத தொகையை (ரூ. 5000) அதிகரிப்பதும் (ரூ. 10000) அடங்கும். இவை பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன, என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
அடல் பென்ஷன் திட்டம், PFRDA அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இறப்பு அல்லது கடைசி கட்ட நோய் போன்ற சந்தர்ப்பங்களைத் தவிர, 60 வயதில் திட்டத்தில் இருந்து வெளியேறிக் கொள்ளலாம். அப்போது, முதலீடு செய்யப்பட்ட தொகை 100% ஓய்வூதியமாக மாற்றப்பட்டு வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்பவர்கள் ஓய்வூதிய காலத்திற்கு பிறகு பென்ஷன் பெறலாம். வருமான வரி செலுத்துவோர் இந்த திட்டத்தில் சேர தகுதியற்றவர்கள்.
உண்மையிலேயே சிறிய முதலீட்டில் சிறந்த திட்டமாக விளங்கும் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கான அதிகபட்ச வரம்பை அதிகரிப்பது, சாமானிய மக்களுக்கு பெரிதும் உதவிகரமானதாக இருக்கும். இது போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் ஓய்வுக்கு பின்பு ஒருவரை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் பலருக்கும் குறைந்துவிடும் என்பதே நிதர்சன உண்மை.
More From GoodReturns

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!



Click it and Unblock the Notifications