மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு (MTHL) அல்லது அடல் சேது என அழைக்கப்படும் இந்தக் கடல் மீது அமைந்திருக்கும் பிரம்மாண்ட சாலை திட்டம் மும்பையில் உள்ள செவ்ரி மற்றும் நவா-ஷேவாவுடன் இணைக்கிறது. இது மும்பைக்கும் - நவி மும்பைக்கும் இடையே விரைவான இணைப்பை ஏற்படுத்துகிறது.
இந்த மாபெரும் திட்டத்தைப் பிரதமர் இன்று திறந்துவைக்கும் வேளையில் இந்தத் திட்டம் ஏன் மிகவும் முக்கியம்..? இந்தத் திட்டத்தின் மூலம் மும்பைக்கும், மும்பை மக்களுக்கும், மும்பை பொருளாதாரத்திற்கும் என்ன லாபம் வாங்கப் பார்ப்போம்.

மகாராஷ்டிராவில் அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி-நவ ஷேவா அடல் சேது திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று டிசம்பர் 12, வெள்ளிக்கிழமை திறந்து வைக்கிறார். சுமார் ₹17,840 கோடி செலவில் கட்டப்பட்ட அடல் சேது திட்டம், நாட்டின் மிக நீளமான பாலமாகவும், நாட்டின் மிக நீளமான கடல் பாலமாகவும் உள்ளது.
இந்தப் பாலத்தின் கட்டுமானத்திற்கு அடிக்கல் 2016 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டப்பட்டது. இது 21.8 கிமீ நீளமுள்ள ஆறுவழிப் பாலமாகும், இது கடலின் மேல் 16.5 கிமீ நீளமும், நிலத்தில் 5.5 கிமீ நீளமும் கொண்ட பிரம்மாண்ட பாலமாக அமைந்துள்ளது.
அடல் சேது திட்டத்தின் மூலம் மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும். இது மும்பையிலிருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்குப் பயண நேரத்தையும் பெரிய அளவில் குறைக்கும். இது மும்பை துறைமுகத்திற்கும் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும்.
இந்த அடல் சேது பாலத்தில் பயணிக்க ஒரு வழி கட்டணமாகக் காருக்கு 250 ரூபாய் வசூலிக்கப்படுகிறது, அதே நேரத்தில் ரிட்டன் பயணங்களுக்கான கட்டணம் மற்றும் தினசரி மற்றும் அடிக்கடி பயணிக்கும் கட்டணங்கள் ஆகியவை மாறுபடுகிறது.

இந்த அடல் சேது பாலத்தின் மூலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் மற்றும் தெற்கு மத்திய மும்பையில் உள்ள செவ்ரி இடையேயான தூரம் 15 கிலோமீட்டர் குறைகிறது. மேலும் பயண நேரம் சுமார் இரண்டு மணி நேரத்திலிருந்து 15 முதல் 20 நிமிடங்களாகக் குறையும் எனவும் தெரிகிறது.
இந்தியாவின் வாகன நெரிசல் அதிகம் உள்ள நகரங்களில் மிகவும் முக்கியமானது மும்பை. ஒரு கி.மீ.க்கு சுமார் 2,000க்கும் அதிகமான வாகனங்கள் சாலையில் உள்ளது. இதனால் மும்பையின் பயண நேரத்தையும் வாகன நெரிசலையும் குறைக்கக் கட்டாயம் அதிகப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயம் காரணம். இது நாட்டின் நிதியியல் தலைநகரமாகும்.
தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களில் தினமும் 80 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்டு செல்லும் மிகவும் நெரிசல் நிறைந்த இன்ட்ரா-சிட்டி ரயில்வே வழித்தடத்தை மும்பை கொண்டு இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளில் மும்பையின் கார் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இதேவேளையில் மும்பை அதன் சாலை இணைப்புகள் அதிகரிக்கப்படவில்லை. மும்பையின் சாலைகளின் நெட்வொர்க் டெல்லி மற்றும் பெங்களூரை விடப் பின்தங்கியுள்ளது, டெல்லியின் 29,000 கிமீ சாலை நெட்வொர்க்-ல் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான அதாவது 2,000 கிமீ நீளமுள்ள சாலைகள் தான் மும்பை நகரத்தில் உள்ளது. இதேபோல் பெங்களூரை ஒப்பிடுகையில் ஐந்தில் ஒரு பங்கு கூட இல்லை.
மும்பையின் மோசமான டிராபிக் பிரச்சனை காரணமாகவே பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் வேறு நகரங்களுக்கும், வேறு மாநிலத்திற்கும் சென்று வந்த நிலையில் இந்தப் பாலத்தின் மூலம் டிராபிக் பிரச்சனை தீர்ந்துவிடும் பட்சத்தில் புதிய முதலீடுகளும், அதிகப்படியான நிறுவனங்களும் வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
இதேபோல் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் மற்றும் தெற்கு மத்திய மும்பையில் உள்ள செவ்ரி ஆகிய இடங்களை இந்த 21.8 கிமீ நீளமுள்ள ஆறுவழிப் அடல் சேது பாலம் இணைக்கும் காரணத்தால் இவ்விரு பகுதிகள் பெரிய அளவில் வளர்ச்சி அடையும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications