900 கோடி முதலீடு.. ஒசூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் Ather Energy..!

எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி-யின் முக்கிய பங்குதாரர்களான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஜிஐசி நிறுவனத்திடமிருந்து சுமார் 900 கோடி ரூபாய் அளவிலான தொகையை பங்கு உரிமை வெளியீட்டின் மூலம் திரட்டியுள்ளது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்த நிதியை புதிய மாடல் ஸ்கூட்டர்களை வெளியிடுவதற்கும், அதன் சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் சில்லறை வணிக வலையமைப்பின் விரிவாக்கத்திற்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

900 கோடி முதலீடு.. ஒசூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் Ather Energy..!

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது மாபெரும் உற்பத்தி தளத்தை தமிழ்நாட்டின் முக்கிய உற்பத்தி தளமான ஓசூரில் வைத்துள்ளது. இந்த 900 கோடி ரூபாய் முதலீட்டின் பெரும் பகுதி முதலீடு ஒசூர் தொழிற்சாலையில் முதலீடு செய்து வாகனங்களின் தயாரிப்பு எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.

கர்நாடகா-வை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஏதர் எனர்ஜி, தமிழ்நாட்டின் ஓசூரில் உற்பத்தி தளத்தை கொண்டு இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறது.

ஒசூரில் சுமார் 300,000 சதுர அடி அளவில் தொழிற்சாலை வைத்துள்ளது, இது இந்நிறுவனத்தின் இரண்டாவது உற்பத்தி தளமாகும். புதிய ஆலை முதல் ஆலையை விட இரண்டு மடங்கு பெரியது மற்றும் ஆண்டுக்கு 420,000 வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும்.

இந்த ஆலையில் இரண்டு வாகனங்கள் மற்றும் மூன்று பேட்டரி லைன்கள் உள்ளன மற்றும் 1,600 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த 900 கோடி ரூபாய் முதலீட்டில் பெரும் பகுதி ஒசூர் தொழிற்சாலைக்கு வர வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. ஆனால் ஏத்தர் எனர்ஜி முழு திட்டத்தை வெளியிடவில்லை.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 2022 ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் 2022 ஆம் நிதியாண்டில் அதன் வருவாய் 4.4 மடங்கு உயர்ந்து 408 கோடி ரூபாயில் இருந்து 1,783 கோடியாக உயர்ந்து. ஏதர் எனர்ஜியின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான தருண் மேத்தா இந்த முதலீடு குறித்து பேசுகையில் பங்கு உரிமைகள் வெளியீட்டிற்கு வலுவான ஆதரவு இருந்தது, பங்குதாரர்களின் நம்பிக்கையைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறினார்.

இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான எங்கள் மிகப்பெரிய திட்டம் இந்த முதலீட்டின் மூலம் உயிர்பெற்றுள்ளது. இந்த முதலீட்டு சுற்றின் மூலம் எங்களுடைய போர்ட்போலியோவை விரிவுபடுத்த உள்ளோம் என்று தருண் மேத்தா.

இதேபோல் கடந்த வருடம் வெறும் 30 ஸ்டோர்களை மட்டுமே வைத்திக்கொண்டு வர்த்தகத்தை செய்து வந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது 4 மடங்கு உயர்ந்து 130 கடைகளை திறந்துள்ளது. இதேபோல் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சுமார் 100 நகரங்களில் 200 ரீடைல் டச்பாயின்ட்களை வைத்துள்ளது. இதேபோல் 1500 பப்ளிக் பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க் வைத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+