மெகா ஐபிஓ: Ola-க்கு போடியாக ஏதர் எனர்ஜி.. ஏப்ரல் 25 ரெடியாக இருங்க.. களத்துல சந்திப்போம்..!

இந்தியாவின் டாப் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன நிறுவனமான ஏதர் எனர்ஜி, பங்குச் சந்தையில் குதிக்க ரெடி ஆகிட்டாங்க. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்துடன் வர்த்தகத்தில் நேருக்கு நேர் போட்டிப்போடும் ஏதர் தற்போது பங்குச்சந்தையிலும் போட்டிப்போட உள்ளது. ஏதர் நிறுவனம் வரும் ஏப்ரல் 25-ம் தேதி தனது IPO-வை தொடங்குது. இந்த ஐபிஓவுக்கு பொதுமக்கள் ஏப்ரல் 30 வரை முதலீடு செய்ய விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என மாறிவிட்ட நேரத்துல, இந்தியா போன்று இரு சக்கர வாகனங்கள் அதிகம் கொண்டிருக்கும் நாட்டில் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு இருக்கு. இதை கைப்பற்றவே ஓலா, ஏதர், டிவிஎஸ், ஹீரோ என பல கம்பெனிகள் போட்டிப்போட்டுகிட்டு வராங்க.

மெகா ஐபிஓ: Ola-க்கு போடியாக ஏதர் எனர்ஜி.. ஏப்ரல் 25 ரெடியாக இருங்க.. களத்துல சந்திப்போம்..!

ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் இந்த ஐபிஓ, ரூ.2,626 கோடி மதிப்பிலான புது பங்கு வெளியீடு மற்றும் 1.1 கோடி பங்குகளை Offer for Sale பிரிவிலும் விற்பனை செய்ய பெரும் முதலீட்டை திரட்ட போறாங்க. இந்த OFS பிரிவில் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளான தருண் சஞ்சய் மற்றும் ஸ்வப்னில் பாபன்லா ஆகியோர் சில பங்குகளை விற்க உள்ளனர். இவர்களோடு சேர்ந்து, மற்ற சில கார்ப்பரேட் பங்குதாரர்களும் தங்களோட பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

தற்போது ஏதர் நிறுவனத்தோட முக்கிய புரமோட்டர்களாக தருண் சஞ்சய் மேத்தா, ஸ்வப்னில் பபன்லால் ஜெயின், மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் இருக்காங்க. இவங்களோட மொத்த பங்கு இருப்பு, ஐபிஓவுக்கு முன்னாடி 52.67 சதவீதமாக இருக்கு. ஒவ்வொரு பங்கோட முக மதிப்பு (Face Value) ரூ.1 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கு.

இதேவேளையில் இந்த ஐபிஓ-வின் விலை வரம்பு (Price Band) நேற்று வரைக்கும் அறிவிக்கப்படால் இருந்த நிலையில, இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கு. ஒரு பங்கு விலை 304-321 ரூபாய் விலையில் இந்த ஐபிஓ-வில் பங்குகள் விற்கப்பட உள்ளது. இதனால் ஏதர் ஐபிஓ-வில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கும் அனைத்து முதலீட்டாளர்களும் இனி திட்டமிட்டு முதலீடு செய்யலாம்.

ஏதர் எனர்ஜி இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் பணத்தை பல முக்கிய திட்டங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கு. முதலாவதாக, மகாராஷ்டிராவில் ஒரு புது எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தொழிற்சாலையை அமைக்க இந்த பணம் பயன்படுத்தப்டும்.

இந்த தொழிற்சாலை, அதரின் உற்பத்தி திறனை பெருக்கி, இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சந்தையில் அவங்களோட பங்கை வலுப்படுத்தும். இதோடு, நிறுவனத்தோட கடன்களை அடைப்பது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) திட்டங்களுக்கு முதலீடு செய்வது, மார்க்கெட்டிங் செலவுகள் என நிறுவனத்தின் தடாலடி குரோத்-க்கு இந்த பணத்தை பயன்படுத்தப்போறாங்க.

எலக்ட்ரிக் டூ வீலர் விற்பனை தற்போது ஒலா முதல் இடத்தில் உள்ளது, ஆனால் ஓலா வாடிக்கையாளர் சேவையில் மிகப்பெரிய தோல்வியை கண்டு வருகிறது. சமீபத்தில் எலக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்போவதாக அறிவிச்சு இருக்காங்க. இந்த போட்டி மிகுந்த சந்தையில் வெற்றி பெற பண பலம் கட்டாயம் தேவை, இதற்காக தான் ஏதர் ஐபிஓ வெளியிட போறாங்க.

ஏதர் எனர்ஜியை இந்தியாவின் எலக்ட்ரிக் வாகனத் துறையில் முன்னணி நிறுவனமாக நிலைநிறுத்த உதவும். குறிப்பா, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படுற பணம், புது தொழில்நுட்பங்களையும், அதிக திறன் கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களையும் உருவாக்க உதவும் என கணிக்கப்படுது.

ஏதர் எனர்ஜி ஐபிஓ-வில் முதலீடு செய்யும் முன் யார் இவங்க? என்ன செய்யுறாங்க..? என்பதை முழுமையாக தெரிஞ்சிகோங்க.

ஏதர் எனர்ஜி ஒரு தூய்மையான எலக்ட்ரிக் வாகன (EV) நிறுவனம், இது எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்யும் ஒரு நிறுவனம். இவங்க தங்களோட பேட்டரி பேக்குகளை உள்நாட்டிலேயே தயாரிக்கிறாங்க, ஆனா பேட்டரிக்கு தேவையான லித்தியம்-ஐயன் செல்களை வெளிநாட்டு சப்ளையர்களிடம் இருந்து வாங்குறாங்க.

வாகனத்தோட மற்ற பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ், சேஸிஸ் போன்றவற்றை வெளி நிறுவனங்களிடம் இருந்து வாங்கி ஓசூரில் இருக்கும் பேக்டரியில் தயாரிச்சு இந்தியா முழுசும் விக்குறாங்க.

ஆதரின் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன வரிசையில் இரண்டு முக்கிய மாடல்கள் இருக்கு - ஏதர் 450 மற்றும் ஏதர் ரிஸ்ட்டா. இந்த இரண்டு மாடல்களிலும் மொத்தம் ஏழு வேரியன்ட்கள் இருக்கு. ஏதர் எனர்ஜியோட ஐபிஓ, முதலீட்டாளர்களுக்கு எலக்ட்ரிக் வாகனத் துறையில் ஒரு நம்பிக்கையான முதலீட்டு வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+