இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான சந்தையில் முன்னணியில் இருக்கிறது ஏதர் எனர்ஜி நிறுவனம். இந்த நிறுவனத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டின் ஓசூர் மாவட்டத்தில் தன்னுடைய வாகன உற்பத்தி ஆலையை நிறுவி செயல்படுத்தி வருகிறது. இங்கே உற்பத்தியாக கூடிய இருசக்கர வாகனங்கள் தான் நாடு முழுவதும் பயணம் செய்கின்றன.
ஓசூர் உற்பத்தி ஆலையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாக ஏதர் எனர்ஜி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு தான் இந்நிறுவனம் ரிஸ்தா என்ற மின்சார ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த ரிஸ்தா வாகனத்தை பொறுத்தவரை ஏதரின் பிராண்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாக கூடிய வாகனமாக மாறி இருக்கிறது.

ஓசூர் ஆலையில் இந்த வாகனங்களை உற்பத்தி செய்து வரக்கூடிய ஏதர் எனர்ஜி நிறுவனம் 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர்களை ஓசூர் ஆலையில் நாங்கள் உற்பத்தி செய்து புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறோம் ஒரு சாதாரண புரோட்டோ டைப்பில் தொடங்கி தற்போது 5 லட்சம் என்ற ஒரு மிகப்பெரிய எண்ணிக்கை எட்டி ருக்கிறோம் என ஏதர் எனர்ஜி நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஸ்வப்னில் ஜெயின் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
நாங்கள் வெறும் வாகனத்தை மட்டும் உற்பத்தி செய்யவில்லை மின்சார வாகனத்திற்கான ஒரு எக்கோ சிஸ்டத்தை உருவாக்கி இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார். தரத்திற்கு முக்கியத்துவம் தருகிறோம் இதுதான் பெருமளவிலான வாடிக்கையாளர்கள் எங்கள் மீது நம்பிக்கையை வைக்க உதவுகிறது என கூறியுள்ளார். அறிமுகம் செய்யப்பட்ட ஓர் ஆண்டுகளுக்கு உள்ளாகவே ரிஸ்தா வாகனத்தை பொறுத்தவரை ஏதர் உற்பத்தி செய்யும் மூன்றில் ஒரு வாகனமாக தற்போது உருவாகி இருக்கிறது.

பெரும்பாலான குடும்ப வாடிக்கையாளர்கள் இந்த ஸ்கூட்டரை தான் அதிக எண்ணிக்கையில் வாங்குவதாக ஏத்தர் நிறுவனம் தெரிவிக்கிறது. மூன்றாம் நிலை நகரங்களிலும் தற்போது தீவிரமாக தங்களை விரிவாக்கம் செய்து வருகிறது என தெரிவித்துள்ளது. ஏத்தரை பொறுத்தவரை ஓசூரில் இரண்டு உற்பத்தி ஆலைகளை செயல்படுத்தி வருகிறது.
ஒரு ஆலை முற்றிலும் இந்த மின்சார ஸ்கூட்டர்களை அசெம்பிள் செய்யக்கூடியது, மற்றொரு ஆலை பேட்டரி உற்பத்திக்கான மையமாக இயங்கி வருகிறது. ஆண்டுக்கு 4.2 லட்சம் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த இரண்டு ஆலைகளும் இருக்கின்றன.
ஏதரின் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையின் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் ஓசூரில் உருவாக்கப்பட்டிருக்கின்றன . ஓசூரில் உற்பத்தியாக கூடிய வாகனங்கள் நாடு முழுவதும் பயணம் செய்வது ஓசூர் மக்களுக்கும் பெருமிதம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. மற்றொரு போட்டி நிறுவனமான ஓலாவும் கூட ஓசூரில் தான் தன்னுடைய உற்பத்தி ஆலையை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications