மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி (Ather Energy), மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகர், பிட்கின் என்ற இடத்தில் தனது மூன்றாவது உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய உற்பத்தி ஆலையில் மின்சார இரு சக்கர வாகனங்கள் மற்றும் பேட்டரி பேக்குகள் இரண்டையும் தயாரிக்க உள்ளதாக நிறுவனம் புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
ஏதர் தற்போது தமிழ்நாட்டின் ஓசூரில் இரண்டு உற்பத்தி நிலையங்களைக் கொண்டுள்ளது, ஒன்று பேட்டரி உற்பத்திக்காகவும் மற்றொன்று உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை ஒன்று சேர்த்து விற்பனை செய்யவும் பயன்படுகிறது. இப்போது நிறுவப்படும் ஆலையில் பேட்டரி பேக்குகள் மற்றும் வாகனங்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலை சுமார் ரூ. 2000 கோடி முதலீட்டில் தொடங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏதர் நிறுவனத்தின் கூற்றுப்படி, மகாராஷ்டிராவில் அமைய இருக்கும் இந்த புதிய ஆலை காரணமாக போக்குவரத்து செலவுகளைக் குறைத்து, நாட்டில் உள்ள அதிக சந்தைகளில் விற்பனையை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், "மகாராஷ்டிர மாநிலம் தொழில்களுக்கு ஏற்ற சூழலை வழங்குகிறது. மேலும் முதலீடுகளுக்கான முதன்மை இடமாகவும் திகழ்கிறது. இந்தியாவின் ஸ்டார்ட்அப் மற்றும் உற்பத்தி துறையை வலுப்படுத்தி, உலக தரத்திற்கு இணையாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நரேந்திர மோடி அவர்களின் கனவை நிறைவேற்றுவதற்கு இது உதவும். ஏதர் நிறுவனம் மகாராஷ்டிராவில் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம், இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தி மையமாக மகாராஷ்டிர மாநிலத்தின் நிலை மேலும் உயரும்" என்று கூறியுள்ளார்.
இது 2000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் புதிய ஆலை என்றும், சுமார் 4000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் என்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் சமூக ஊடக தளமான X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த அதிநவீன ஆலை ஆண்டுக்கு 1 மில்லியன் யூனிட் வாகனங்கள் மற்றும் பேட்டரி பேக்குகளை உற்பத்தி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏதர் எனர்ஜி-இன் இணை நிறுவனர் மற்றும் CTO, ஸ்வப்னில் ஜெயின் கூறுகையில், 2021-ஆம் ஆண்டு முதல், ஓசூரில் உள்ள எங்களின் தொழிற்சாலைகள், நாடு முழுவதும் உள்ள தேசிய உற்பத்தி மையமாக செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் ஆதரவுடனும், அதிக சப்ளையர்களின் உதவியுடனும் செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
ஏதர் தற்போது இந்தியா முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களையும் 1900-க்கும் மேற்பட்ட ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது. செயல்திறன்மிக்க 450X, 450S மற்றும் 450 Apex ஸ்கூட்டர்களுக்காக இந்நிறுவனம் அறியப்படுகிறது. ஏதர் எனர்ஜி சமீபத்தில் தனது முதல் ஸ்கூட்டரான ரிஸ்டாவை அறிமுகப்படுத்தியது. Rizta S ஆனது 2.9 kWh பேட்டரியுடன் வருகிறது மற்றும் 123 கிமீ IDC வரம்பை வழங்குகிறது. Rizta Z ஆனது 2.9 kWh பேட்டரியுடன் 123 கிமீ IDC வரம்பையும் வழங்குகிறது.
மின்சார இரு-சக்கர வாகன உற்பத்தியில் முன்னோடியாக திகழும் ஏதர் எனர்ஜி நிறுவனம், இந்த புதிய ஆலையின் மூலம் உற்பத்தியை அதிகரிப்பதோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தங்கள் வாகனங்களை எளிதாக கொண்டு செல்ல முடியும் என எதிர்பார்க்கிறது. இதன் மூலமாக, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications