எங்கு திரும்பினாலும் பணிநீக்கம், ஒருப்பக்கம் ஊழியர்களுக்கு ஏஐ துறையில் திறன் இல்லை என பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் வேளையில், மறுப்புறம் ஏஐ துறையில் திறன் இருந்தால் 100 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரையில் சம்பளம் கொடுக்க தயாராக இருக்கும் நிறுவனங்கள் என ஐடி மற்றும் டெக் ஊழியர்களின் தூக்கக்தை தொலைத்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பிரைவேட் ஜெட் வாங்கியது மூலம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளான ஒரு சிஇஓ, தற்போது இவருடைய நிறுவனத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்ட காரணத்தால் 150 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்படுவதாக ஒரு வீடியோ காலில் அறிவித்துள்ளார்.

JIRA மென்பொருளை உருவாக்கும் ஆஸ்திரேலிய டெக் நிறுவனமான அட்லாசியன் தனது 150 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் பணியை புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் செய்யும் என கூறப்படுகிறது.
இந்த பணிநீக்கங்கள் குறித்து ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட விதமும் டெக் ஊழியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. SkyNews Australia செய்தியின்படி, அட்லாசியன் CEO மற்றும் நிறுவனர் மைக் கனன்-புரூக்ஸ் ஒரு ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோ மூலம் ஊழியர்களுக்கு 150 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை அறிவித்துள்ளதாக தெரிகிறது.
இந்த வீடியோவில், அவர் தனது வீட்டில் இருக்கும் அலுவலகத்தில் பச்சை நிற ஹூடியை அணிந்துக்கொண்டு மிகவும் கேஷுவலாக பேசியுள்ளார். மேலும் இந்த வீடியோவில் எந்த பிரிவு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர், யாரெல்லாம் பணியை இழக்க உள்ளனர் என்பது குறித்து எவ்விதமான தகவலையும் பகிரவில்லை.

மேலும் மைக் கனன்-புரூக்ஸ் இந்த வீடியோவில், பணியை இழக்கும் ஊழியர்கள் தங்கள் நிலைமை குறித்து அறிய 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். வேலையை இழக்கும் நபர்களுக்கு மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் லேப்டாப்கள் உடனடியாக செயல் இழக்கும். இதோடு பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த பணி நீக்கங்களுக்கு முன்பு, அட்லாசியன் CEO மைக் கனன்-புரூக்ஸ் சொந்தமாக பம்பார்டியர் 7500 பிரைவேட் ஜெட் விமானத்தை வாங்கியதற்கு பல விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்த விமானத்தின் மதிப்பு 75 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சமுக வலைத்தளத்தல் பிரைவேட் ஜெட் வாங்க காசு இருக்கு.. ஐடி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்த காசு இல்லையா.. என கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications