ஏடிஎம் கார்டுகள் நிதி நிர்வகிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பணம் எடுப்பதற்கு வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதால், பெரும்பாலான மக்கள் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். வங்கிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று செல்லான் பெற்று பணம் பெறுவதை விட எளிதான முறையில் ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம். ஏடிஎம் கார்டுகள் வசதியானதாக உள்ளது மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால் ஏடிஎம் கார்டுகளின் மூலம் விபத்து மற்றும் மரண காப்பீடு உள்ளிட்ட கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
ஏடிஎம் கார்டுகளுக்கு கிடைக்கும் கவரேஜ்: துரதிஷ்டவசமாக ஏடிஎம் கார்டு வைத்திருப்பவருக்கு மரணம் ஏற்பட்டால் அவர்களின் குடும்பம் ஏடிஎம் கார்டின் வகையை பொருத்து ரூ.10 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகையை பெறலாம். பெரும்பாலான வங்கிகள் கணக்கு தொடங்கும் போதே ஏடிஎம் கார்டை வழங்குகிறது. அதற்கு தானாகவே விபத்து காப்பீட்டையும் வழங்குகின்றன. இருப்பினும் இந்த நன்மை இருப்பது பெரும்பாலான ஏடிஎம் கார்டு வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.

ஏடிஎம் கார்டுகளின் அடிப்படையில் கவரேஜ் தொகை: பொதுவாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஏடிஎம் கார்டுகளின் அடிப்படையில் வெவ்வேறு கார்டுகளுக்கும் வெவ்வேறு கவரேஜ் வழங்கப்படுகிறது, கிளாசிக் கார்டுகளுக்கு ரூ. 1 லட்சம் வரையிலும், பிளாட்டினம் கார்டுகளுக்கு ரூ 2 லட்சம் வரையிலும், ஸ்டாண்டர்ட் மாஸ்டர் கார்டுகளுக்கு ரூ. 50,000 வரையிலும், பிளாட்டினம் மாஸ்டர் கார்டுகளுக்கு ரூ. 5 லட்சம் வரையிலும், விசா கார்டுகளுக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலும், ரூபே கார்டுகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் கவரேஜ் வழங்கப்படுகிறது.
கூடுதலாக விபத்து காரணமாக கை, கால் இழப்பு போன்ற கடுமையான காயங்கள் ஏற்பட்டால் ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.50,000 ரூபாய் வரை பெறலாம். ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் இறந்துவிட்டால் கார்டு வகையின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். காப்பீட்டு தொகையைப் பெற குடும்ப உறுப்பினர்கள் வங்கி கிளைக்கு சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதி: இந்த காப்பீட்டை பெறுவதற்கு ஏடிஎம் கார்டு பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து 45 நாட்களுக்கு மேல் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
FIR ரிப்போர்ட்
மருத்துவ சிகிச்சை பதிவுகள்
இறப்பு சான்றிதழ்
வங்கி கோரும் பிற ஆவணங்கள்
இந்தக் காப்பீட்டுப் பலனைப் புரிந்துகொண்டு பயன்படுத்துவதன் மூலம், ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களின் குடும்பங்கள் கடினமான காலங்களில் முக்கியமான நிதி உதவியைப் பெறலாம்.


Click it and Unblock the Notifications