ATM-ல் பணம் எடுக்க போறீங்களா..? ரிசர்வ் வங்கி வைக்கும் செக்..!

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, தற்போது எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் நாம் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம். அதற்கு மேல் நாம் எடுத்தால், எடுக்கும் ஒவ்வொரு முறையும் அதிகபட்சமாக ரூ.21 வரை கட்டணமாக வசூலிக்கப்படும்.

மேலும், ஏடிஎம்மில் பேலன்ஸ் செக் செய்வது போன்ற பணமில்லாத ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.6 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கே வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் இலவச பரிவர்த்தனைக்கான வரம்பை உயர்த்த வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

ATM-ல் பணம் எடுக்க போறீங்களா..? ரிசர்வ் வங்கி வைக்கும் செக்..!

இந்த சூழ்நிலையில், இலவச 5 பரிவர்த்தனைகள் வரம்பை மீறினால் வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் வசூலிக்கக்கூடிய அதிகபட்ச கட்டணத்தையும், ஏடிஎம் பரிமாற்றக் கட்டணத்தையும் உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், ஏடிஎம்மில் பணம் எடுப்பது வாடிக்கையாளர்களுக்கு காஸ்ட்லியாக மாறும்.

பேமெண்ட்ஸ் ஒழுங்குமுறை அமைப்பான நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ), இலவச 5 பரிவர்த்தனைகளை தாண்டி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் விதிக்கப்படும் அதிகபட்ச கட்டணத்தை ரூ.21லிருந்து ரூ.22ஆக அதிகரிக்க வேண்டும். ரொக்கம் அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தையும் ரூ.6லிருந்து ரூ.7ஆக உயர்த்தலாம்.

அடுத்ததாக, ஏடிஎம் பரிமாற்றக் கட்டணத்தை தற்போதைய ரூ.17லிருந்து ரூ.19ஆக அதிகரிக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கியிடம் பரிந்துரை செய்துள்ளது. ஏடிஎம் பரிமாற்றக் கட்டணம் என்பது தங்களது வாடிக்கையாளர்கள் பிற வங்கிகளின் ஏடிஎம் சேவைகளை பயன்படுத்த ஒரு வங்கி மற்றொரு வங்கிக்கு செலுத்தும் கட்டணமாகும்.

இந்த கட்டணம் வழக்கமாக பரிவர்த்தனையின் ஒரு சதவீதமாகும். மேலும் இது வாடிக்கையாளரின் பில்லுடன் சேர்க்கப்படுகிறது. தற்போது என்பிசிஐ-யின் பரிந்துரையை ஏற்று ஏடிஎம் கட்டணங்களை உயர்த்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அமலுக்கு வந்தால், இலவச பரிவர்த்தனை வரம்பை தாண்டி, ஏடிஎம்மில் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர் கூடுதலாக கட்டணத்தை செலுத்த வேண்டியது இருக்கும்.

என்பிசிஐ-ன் மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத பகுதிகளில் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்துக்கு வங்கிகள் மற்றும் ஒயிட் லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் ஆதரவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் அதிகரித்த பணவீக்கம், கடன் செலவுகள் 1.5-2 சதவீதம் அதிகரிப்பு, அதிக போக்குவதரத்து, பணத்தை நிரப்புதல் மற்றும் இணக்க செலவுகள் காரணமாக பெருநகரம் அல்லாத பகுதிகளில் ஏடிஎம்களை இயக்குவதற்கான செலவு அதிகரித்துள்ளது என்று வங்கிகள் மற்றும் ஏடிஎம் துறையை சேர்ந்தவர்கள் தங்களது தரப்பு நியாயத்தை தெரிவித்தனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+