வெறும் 20 நொடி தான்.. ATM இயந்திரத்தில் UPI மூலம் பணம் எடுக்கும் புதிய வசதி - வீடியோ

இந்தியாவில் நிதியியல் சேவைகள் நாளுக்கு நாள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், பல சேவைகளை மக்களுக்கு எளிமையாக்குகிறது. குறிப்பாக மத்திய அரசு உருவாக்கியிருக்கும் யூபிஐ சேவை மூலம் பல கடிமான நிதி பரிமாற்றங்கள் தற்போது மிகவும் எளிதாகியுள்ளது.

இந்த நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்கனவே வங்கி சேவை மூலம் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் சேவை இருந்தாலும், நேரடியாக யூபிஐ மூலம் பணம் எடுக்கும் சேவை இதுவரையில் இல்லை. அதாவது எப்படி ஒருவர் QR கோட் ஸ்கேன் செய்து பணத்தை செலுத்துகிறோமோ, அதேபோல் QR கோட் ஸ்கேன் செய்து பணத்தை வித்டிரா செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

வெறும் 20 நொடி தான்..  ATM இயந்திரத்தில் UPI மூலம் பணம் எடுக்கும் புதிய வசதி - வீடியோ

இப்புதிய ஏடிஎம் இயந்திரம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் சர்வதேச அளவில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என நம்பப்படுகிறது. மத்திய அரசின் NPCI உருவாக்கிய BHIM மற்றும் UPI கட்டமைப்பில் இயங்கும் ஒரு ஏடிஎம் மெஷின்-ஐ இத்துறையில் பிரபலமாக இருக்கும் NCR CORPORATION உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் டெபிட் கார்ட், வங்கி சேவைகள் என எதுவும் இல்லாமல் BHIM ஆப் மூலம் எளிதாக பணம் எடுக்க முடியும். இந்த வீடியோ தான் தற்போது இந்தியா முழுக்க பிரபலமாகி வருகிறது.

இந்த வீடியோவை பின்டெக் துறையில் பிரபலமான ரவி சுடான்ஜனி வெளியிட்டு உள்ளார், இந்த வீடியோவில் அவரே இந்த புதிய BHIM மற்றும் UPI கட்டமைப்பில் இயங்கும் ஒரு ஏடிஎம் மெஷின் எப்படி இயங்குகிறது என மும்பையில் நடந்த குளோபல் பின்டெக் ஃபெஸ்ட்-ல் காட்டியுள்ளார்.

இந்த புதிய ஏடிஎம் இதுவரையில் பொது சந்தையில் பயன்பாட்டுக்கு வரவில்லை, மேலும் இந்த ஏடிஎம்மில் தற்போது BHIM செயலி மட்டுமே பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். விரைவில் Google Pay, PhonePe, Paytm போன்ற பிற யூபிஐ செயலிகளும் பயன்படுத்தும் அளவுக்கு மேம்படுத்தப்பட உள்ளது.

மேலும் இந்த புதிய ஏடிஎம் இயந்திரத்தில் நடக்கும் பரிமாற்றங்கள் சாதாரண டெபிட் கார்ட் ஏடிஎம் பரிமாற்றம் போலவே கருதப்படும். இதற்கான கட்டணம், இலவச முறைகளில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. ஏற்கனவே ரூபே கார்டு மூலம் மாஸ்டர்கார்டு, விசா கார்டுகளுக்கான ஆதிக்கம் குறைந்த நிலையில், இத்தகைய ஏடிஎம் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+