அடிக்கடி ATM பயன்படுத்துபவரா நீங்கள்? மே 1-ஆம் தேதி முதல் சேவை கட்டணம் உயரப் போகுது!

அடிக்கடி ஏடிஎம்-களை பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தப் பதிவு. 2025 ஆம் ஆண்டின் மே 1-ஆம் தேதி முதல் ஏடிஎம் பயன்படுத்துபவர்களிடம் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்துவதற்கான திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனால் இலவச மாதாந்திர வரம்புகளையும் மீறி ஏடிஎம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். புதிய ஏடிஎம் கட்டணங்கள் மே 1 முதல் அமலுக்கு வர உள்ளன.

ஏடிஎம் நெட்வொர்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் சேவை வழங்குனர்கள் எதிர்கொள்ளும் அதிகரித்த செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகளை காரணம் காட்டி இன்டர் சேஞ்ச் கட்டணங்களை உயர்த்த இருப்பதாக இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் முன்மொழிந்திருந்தது. இதற்கு ரிசர்வ் வங்கி தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.

அடிக்கடி ATM பயன்படுத்துபவரா நீங்கள்? மே 1-ஆம் தேதி முதல் சேவை கட்டணம் உயரப் போகுது!

இந்த கட்டணங்கள் மே 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலவச வரம்பை மீறி பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் பழைய கட்டணம் 17 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது இந்த கட்டணம் 19 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் வங்கி அல்லாத ஏடிஎம்களில் பேலன்ஸ் விவரங்களை தெரிந்து கொண்டால் இதற்கு முன்னர் 7 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது 9 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருந்தாலும், மாதம் மாதம் இலவசமாக ஏடிஎம் பயன்படுத்துவதற்கான வரம்பு எண்ணிக்கையில் மாற்றம் இல்லை. மெட்ரோ நகரங்களில் பிற வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவச பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். மெட்ரோ அல்லாத நகரங்களாக இருந்தால் பிற வங்கி ஏடிஎம்களில் 3 இலவச பரிவர்த்தனைகள் வரை மேற்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் இந்த வரம்புகளை மீறினால் புதிய கட்டணங்கள் விதிக்கப்படும்.

இந்த கட்டணங்களால் அதிக ஏடிஎம் நெட்வொர்க் இல்லாத வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தங்கள் சொந்த வங்கியால் இயக்கப்படாத ஏடிஎம்களில் அடிக்கடி பணம் எடுப்பவர்கள் அல்லது பேலன்ஸ் விவரங்களை சரிபார்க்கும் நபர்கள், ஏடிஎம்-கள் குறைவாக உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் போன்றோர் இந்த அதிகரித்த கட்டணங்களால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

எனவே அதிகரித்த கட்டணங்களை தவிர்ப்பதற்கு வீட்டிலிருந்து கொண்டே யுபிஐ, மொபைல் அப்ளிகேஷன்கள், நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தலாம். இலவச வரம்பை தாண்டி ஏடிஎம் பயன்படுத்துவதைத் தவிர்க்க முயற்சி செய்யலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+