இந்தியாவில் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு அவர்களின் ஓய்வு காலத்தை சிறந்த முறையில் அமைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் தான் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம்.
ஒரு நபர் வேலை செய்யக்கூடிய நிறுவனம் சார்பாகவும் அந்த நபர் சார்பாகவும் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை என்பது பிஎஃப் கணக்கு உருவாக்கப்பட்ட அதில் வரவு வைக்கப்படுகிறது. அந்த ஊழியர் பணி ஓய்வு பெறும்போது இந்த பிஎஃப் கணக்கில் இருக்கக்கூடிய பணம் ஒரு பெரும் தொகையாக வந்து நிற்கும். அரசாங்கம் ஆண்டுதோறும் இதற்கு வட்டியும் வழங்குகிறது என்பதால் கூட்டு வட்டி முறையில் இது வளர்ச்சி அடைகிறது.

குறிப்பிட்ட அந்த நபர் பணி ஓய்வு பெறும்போது ஒரு கணிசமான தொகை அவருக்கு கிடைக்கும் . இது அவருக்கு மிகப்பெரிய ஒரு சமூக பாதுகாப்பையும் நிதி ரீதியான பாதுகாப்பையும் தரும். பிஎஃப் திட்டம் என்பது காலமாற்றத்திற்கு ஏற்ப டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிஎஃப் கணக்கில் இருக்கக்கூடிய பணத்தை ஏடிஎம் வழியாக எடுத்துக் கொள்வதற்கான வசதி விரைவில் கொண்டுவரப்படும் என கடந்த சில மாதங்களாகவே தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது எப்போது முதல் நடைமுறைக்கு வருகிறது என்ற விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஈபிஎஃப்ஓ அமைப்பு இது தொடர்பாக வரும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரம் முக்கியமான ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்த இருக்கிறது . இந்த ஆலோசனை கூட்டத்தில் பிஎஃப் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதற்கான ஒப்புதல் பெறப்பட இருக்கிறது. இந்த ஒப்புதல் பெறப்பட்டவுடன் ஈபிஎஃப்ஓ அமைப்பின் உள்கட்டமைப்பிலேயே பல்வேறு டிஜிட்டல் ரீதியிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட உடன் ஜனவரி மாதத்தில் இருந்து பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களின் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் வாயிலாக எடுப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என மணி கண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது . இந்த கூட்டத்திலேயே ஒரு சந்தாதாரர் எவ்வளவு தொகையை ஏடிஎம் வாயிலாக எடுத்துக் கொள்ள முடியும் என்பன உள்ளிட்ட அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தற்போது 78 மில்லியன் பிஎஃப் கணக்குகள் இருக்கின்றன இதில் சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் பராமரிக்கப்பட்டு வருகிறது . தற்போது பிஎஃப் கணக்கிலிருந்து நாம் பணத்தை எடுக்க வேண்டுமென்றால் அதற்காக விண்ணப்பம் செய்துவிட்டு சில நாட்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே அந்த பணமானது நம்முடைய கணக்கில் வந்து சேரும்.
ஆனால் இந்த ஏடிஎம் வசதி வந்து விட்டால் ஒரு குறிப்பிட்ட அளவிலான பணத்தை நமக்கு தேவைப்படும் நேரத்தில் நேரடியாக சென்று ஏடிஎம் வாயிலாகவே எடுத்துக் கொள்ள முடியும் . இது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதை எளிமையானதாக மாற்றும் . ஆனால் அதற்கு ஏற்ற வகையில் பல்வேறு கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications