பெங்களூரில் இனி E-Khata இல்லாம ஒரு வேலையும் நடக்காது..! மக்களே சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..!!

கர்நாடகாவில் சொத்தின் உரிமையை உறுதிப்படுத்தும் முக்கியமான சட்ட ஆவணமாகக் கருதப்படுவது காத்தா சான்றிதழ். இது சொத்தின் அளவு, பரப்பளவு, இருப்பிடம் மற்றும் உரிமையாளரின் விவரங்களை தெளிவாக வழங்க உதவுகிறது. குடியிருப்பு மற்றும் வணிக சொத்துகளுக்காகவும் இது காத்தாயமான ஆவணமாகும். சொத்தின் சரியான உரிமையாளர் யார் என்பதை உறுதி செய்ய, புலனாய்வாளர்களும் வாங்கும் விருப்பமுள்ளவர்களும் இந்த ஆவணத்தை முக்கியமாக பயன்படுத்துகின்றனர்.

மேலும், இந்த சொத்து யாருக்கு சொந்தம், எப்போது வாங்கப்பட்டது, வரிவிதிப்பு நிலைமை போன்ற விவரங்கள் எளிதாகக் காண முடியும். இ-காத்தா மூலம் சொத்துகளின் உரிமை விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுவதால், முறைகேடுகள் குறைக்கப்படுவதாகவும், சொத்து வரி வசூலில் பெரிய உயர்வு ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஆன்லைனில் பொதுமக்களுக்கு எளிதான மற்றும் பாதுகாப்பான சேவையை அரசு உறுதி செய்துள்ளது. இ-காத்தா என்பது உங்கள் சொத்தை அரசு அங்கீகரிக்கிறது என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகும். எனவே, இந்த ஆவணம் இல்லாமல் சொத்துடன் தொடர்புடைய பணிகள் மேற்கொண்டால் அது செல்லுபடியாகாது.

பெங்களூரில் இனி E-Khata இல்லாம ஒரு வேலையும் நடக்காது..! மக்களே சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..!!

இ-காத்தா காத்தாயம் : இந்த சூழலில், ஜூலை 1ஆம் தேதி முதல் பெங்களூரு மாநகராட்சியின் (BBMP) எல்லைக்குள் உள்ள அனைத்து சொத்துக்களுக்கும் 'இ-காத்தா (e-Khata)' என்பது காத்தாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "ஏற்கனவே 5.34 லட்சம் சொத்துகள் 'இ-கtடா' திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மொத்தம் 25 லட்சம் சொத்துக்களை இ-காத்தா அமைப்பில் கொண்டுவர வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்றும் தனது எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இ-காத்தா திட்டத்தின் பயன்கள் : மக்கள் லஞ்சம் கொடுக்காமல், நேரடியாக எந்தப் பிரச்சனையும் இன்றி சொத்துப் பதிவுகளை பெற முடியும். அரசே இந்த சேவையை மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் கார்டு எப்படி முக்கியமானதாக இருக்கிறதோ, அதேபோல் சொத்துக்கும் விரைவில் டிஜிட்டல் ஐடி எண் வழங்கப்படும். இந்த திட்டம், நகராட்சியின் சொத்துத் தகவல்களை மின்மயமாக்கி, சீராகவும் வெளிப்படையாகவும் பராமரிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

ஜூலை மாதம் முழுவதும் சிறப்பு முகாம் :இ-காத்தா மின்மயமாக்க திட்டத்துக்கு மக்களை முழுமையாக மாற்றம் செய்ய உதவுவதற்காக, பெங்களூரு மாநகராட்சி (BBMP) ஜூலை மாதம் முழுவதும் அனைத்து வார்டுகளிலும் 'இ-காத்தா மேளா' (e-Khata Mela) என்ற சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில், பொதுமக்கள் தங்கள் சொத்துகளுக்கான இ-காத்தாவை பெறவோ அல்லது புதுப்பிக்கவோ நேரடியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முகாம்களில் BBMP அதிகாரிகள் நேரில் வந்து பொதுமக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவார்கள். இந்த முகாமானது அனைத்து BBMP வார்டு அலுவலகங்களிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்களது சொத்துகளை இ-காத்தா பதிவேட்டில் இதுவரை சேர்க்கவில்லை என்றால், அவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இ-காத்தாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி..?: பெங்களூரு மாநகராட்சியில் (BBMP) சொத்து வைத்திருப்பவர்கள், தங்கள் சொத்துக்கு இ-காத்தா (e-Khata) பெற ஆஃப்லைன் (உங்கள் வார்டு அலுவலகத்தில் நடைபெறும் இ-கடா மேளாவில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்) மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். அதேபோல், ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பினால் https://bbmpeaasthi.karnataka.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் : ஆதார் எண், பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம் (Registered Sale Deed), சொத்தின் சமீபத்திய புகைப்படம், பணப்பிணை சான்றிதழ் (Encumbrance Certificate)

கவனிக்க வேண்டியவை : ஆதார் எண்ணுடன் eKYC முடித்திருக்க வேண்டும். சொத்தின் இருப்பிடத்தை ஆன்லைன் வரைபடத்தில் சரிபார்க்க வேண்டும். உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட இ-காத்தா சான்றிதழ் இணையதளம் மூலம் வழங்கப்படும். சான்றிதழ் தயார் ஆனதும், உங்களுக்கு SMS அல்லது மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பப்படும்.

கட்டிடத் திட்ட அங்கீகாரத்திற்கு இ-காத்தா அவசியம் : ஜூலை முதல், அனைத்து கட்டிடக் கட்டுமான தொழிலாளர்களும் மற்றும் சொத்து உரிமையாளர்களும், கட்டிடத் திட்ட அங்கீகாரம் (Building Plan Approval) பெறும்போது, தங்களது இ-காத்தா அல்லது மின்சார சொத்து அடையாள எண் (EPID - Electronic Property ID) ஒன்றை OBPS ஆன்லைன் போர்டலில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, புதிய கட்டிட திட்டங்களை விரைவாகவும், முறையாகவும் அனுமதிக்க உதவும் புதிய டிஜிட்டல் நடைமுறையாக இது அமையும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+