ஒரு காலத்தில் விமான பயணம் சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த நிலையில், தற்போது அனைத்து தரப்பு மக்களும் எளியாக விமானத்தில் பறக்க கூடிய வகையில் கட்டணம் மலிவாகியுள்ளது. இந்த நிலையில் விமானங்களில் என்ன மாதிரியான பொருட்கள் எல்லாம் அனுமதிக்கப்படாது என்று பலருக்கும் தெரிவதில்லை. பயணம் செய்வதற்கு முன்பாக அதைத் தெரிந்து கொள்வது விமானப் பயணிகளுக்கு மிகவும் நல்லது. அதுவும் நீங்கள் துபாய்க்கு செல்ல இருந்தால் இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாதுகாப்பான விமானப் பயணத்துக்காக விமான நிலையத்தில் அடிக்கடி விதிமாற்றங்கள் செய்யப்படுவதுண்டு.
துபாய் விமானப் பயணிகளுக்கான சிறப்பான விதிகள் இங்கு பார்க்கலாம். பொதுவாக மருந்துகள், கேபின் பேக் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்வார்கள். ஆனால் புதிய விதிகளின்படி நீங்கள் எல்லா வகையான மருந்துகளையும் உங்களுடன் எடுத்துச் செல்ல முடியாது. உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட சில மருந்துகளை மட்டுமே எடுத்துச் செல்லலாம்.

பல நேரங்களில் பயணிகள் தங்களை அறியாமலேயே பல வகைப் பொருட்களை எடுத்துச் செல்வார்கள். அதில் சில பொருட்கள் விமானத்தில் கொண்டு செல்வது சட்டப்படி தவறு என்று விதிகள் கூறுகின்றன. துபாய் விமானத்தில் எதை எடுத்துச் செல்லலாம் எதை எடுத்துச் செல்லக் கூடாது என்பதை லக்கேஜ் செக்கின் பகுதியில் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஐக்கிய அரபு அமீரகம் அல்லது துபாய் செல்வதற்கு முன் பயணிகள் சில விதிகளை பின்பற்ற வேண்டும். உங்களது பேக்கேஜ்களில் உள்ள பொருட்கள் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
விமானத்தில் கொண்டு செல்லக் கூடாத பொருட்கள்: கொகெய்ன், ஹெராயின், பாப்பி விதைகள், தலைசுற்றலை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள், வெற்றிலை, சில மூலிகைகள்.
யானைத் தந்தம், காண்டாமிருகம் கொம்பு, சூதாட்ட கருவிகள், மூன்று மடி மீன் வலை, தடை செய்யப்பட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பிரிண்டடு பொருட்கள், ஆயில் பெயிண்டிங், புத்தகங்கள், கற்சிலைகள், போலி கரன்ஸி நோட்டுகள், வீட்டில் சமைத்த உணவு, அசைவ உணவுகள். இந்த தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டணம் செலுத்தி கொண்டு செல்லக் கூடிய பொருட்கள்: துபாய்க்கு செல்பவர்கள் சில பொருட்களுக்கு கட்டணம் செலுத்தி கொண்டு செல்லலாம். அதில் செடிகள், உரங்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், புத்தகங்கள், அழகுப் பொருட்கள், டிரான்மிஷன் மற்றும் வயர்லெஸ் சாதனங்கள், மதுபானங்கள், எலக்ட்ரானிக் ஹுக்கா, பெர்சனல் கேர் பொருட்கள், இ-சிகரெட்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட பணம் செலுத்தி கொண்டு செல்லலாம். இந்தப் பணத்தை பயணத்துக்கு முன்பே செலுத்த வேண்டும்.
கொண்டு செல்ல முடியாத மருந்துகள்:
பீட்டாமெத்தோல்
ஆல்பா-மெத்தில்பெனானில்
கஞ்சா
கோடாக்சைம்
ஃபெண்டானில்
பாப்பி வைக்கோல் செறிவு
மெத்தடோன்
அபின்
ஆக்ஸிகோடோன்
டிரிமெபெரிடின்
ஃபெனோபெரிடின்
கேத்தினோன்
கோடீன்
ஆம்பெடமைன்
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications