புது வீடு வாங்குவோர், கார் வாங்குவோர் என வங்கி வட்டி விகிதங்கள் குறைவதற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் பலரின் கனவுக்கு முட்டுக்கட்டையாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதல் செய்தி அமெரிக்காவிலிருந்து வந்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்காமல் அறிவிப்பை வெளியிட்ட நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்திய மக்களும் வட்டி குறைப்பிற்காகக் காத்திருக்கும் வேளையில், பொது தேர்தல் நெருங்கி வரும் காலத்தில் ஏப்ரல் 3-5 தேதிகளில் ஆர்பிஐ இரு நாள் நாணய கொள்கை கூட்டம் நடக்கிறது.

அமெரிக்க மத்திய வங்கியை விட சற்றுக் கூடுதலாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வரும் ஜூலை மாதம் வரை வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணமாகப் பணவீக்கம் இருக்கும் என சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்தியா கண்ட அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி (8.4%) பணவீக்கத்தையும் தூண்டிவிட்டுள்ளது. இந்தியாவில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கு வரம்பின் (2% - 6%) மேல் எல்லைக்கு அருகில் இருப்பதால், வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு குறைந்து வருகிறது.
வல்லுநர்கள் கருத்து: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள், வலுவான பொருளாதார வளர்ச்சியோடு சேர்ந்து, தொடர்ந்து உயர்வாக இருக்கும் பணவீக்கம் காரணமாக, ரிசர்வ் வங்கி இந்த முறையும் வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கும் என்று கணித்துள்ளனர்.
சுமார் 56 பொருளாதார வல்லுநர்கள் பங்கேற்ற இந்தக் கருத்துக் கணிப்பில், ஏப்ரல் 3 முதல் 5 வரை நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் ரெப்போ விகிதம் 6.50% ஆகவே இருக்கும் எனக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்காமல் வைத்திருப்பது மக்கள் கடன் வாங்குவதைச் சற்று கடினமாக்கும், இதனால் மக்கள் செலவு செய்வதைக் குறைக்கும். இதன் மூலம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வங்கி முயற்சிக்கும் ஆனால், அதே சமயம், வட்டி விகிதங்கள் மாறாமல் இருந்தால், கடன் பெற்று தொழில் தொடங்குவது போன்ற முதலீடுகளும் பாதிக்கும்.
ரிசர்வ் வங்கி எதிர்காலத்தில் வட்டி விகிதங்களை எப்படி கையாளும் என்பதைப் பொருளாதார நிலவரத்தைப் பொறுத்தே முடிவு செய்யும். பணவீக்கம் கட்டுக்குள் வந்த பிறகு, வட்டி விகிதங்களைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும்.
இதே கருத்தைத் தான் அமெரிக்க மத்திய வங்கி 2 சதவீத பணவீக்க அளவீடுகள் தொடர்ந்து நிலைப்பெற்று நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதையில் இருக்கும் போது கட்டாயம் பென்ச்மார்க் வட்டி விகிதம் குறைக்கப்படும் என அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்தார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 52 பொருளாதார வல்லுநர்களில், 24 பேர் இந்திய ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 3வது காலாண்டில் குறைக்கும் என கூறியுள்ளனர். 17 பேர் 4வது காலாண்டில் குறைக்கும் எனக் கூறியுள்ளனர், மீதமுள்ளவர்கள் அடுத்த ஆண்டு தான் வட்டி விகிதம் குறையும் என அறிவித்துள்ளனர்
தோராயமாக தற்போது 6.50 சதவீதமாக இருக்கும் ரெப்போ விகிதம் செப்டம்பர் கூட்டத்தில் 6.25 சதவீதமாகவும், நவம்பர் கூட்டத்தில் 6.00 சதவீதமாகவும் குறைக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் புதிய வீடு, கார், கடன், வைப்பு நிதி முதலீடு போன்ற அனைத்து நிதி தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் திட்டமிட்டு முதலீடு செய்யுங்கள்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications