இந்திய வங்கிகளில் பல லட்சம் கணக்குகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் தொகையை மக்கள் பயன்படுத்தாமல் பல வருடமாக கிடப்பில் போட்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதேபோல் தற்போது எல்ஐசி நிறுவனத்திலும் உருவாகியுள்ளது.
லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியாவில் 2023-24 நிதியாண்டில் கணிசமான பாலிசிகள் முதிர்வு பெற்றும், அதன் உரிமையாளர்கள் உரிமைகோராத நிலையில் அதிகப்படியான தொகை கிடப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குத் திங்கட்கிழமை பதில் அளித்தார் மத்திய நிதித்துறையின் மாநில பிரிவு அமைச்சரான பங்கஜ் சௌத்ரி பதில் அளித்தார்.

நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2023-24 நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.880.93 கோடி தொகை 3.72 லட்சம் பாலிசிதாரர்களால் இன்னும் கோரப்படாமல் unclaimed maturity amount ஆக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த தொகை கடந்த ஆண்டு ரூ.815.04 கோடியாக இருந்த நிலையில், தற்போது 880.93 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 3.73 லட்சம் பாலிசிதாரர்களுக்கு சொந்தமான தொகை கிடப்பில் இருந்தது. மேலும், 10 டெத் கிளைம் பாலிசிக்கான ரூ.14 லட்சமும் அதே காலகட்டத்தில் கிடப்பில் இருந்ததாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
வங்கிகளுக்கு எப்படி கோரப்படாத தொகையை நிர்வாகம் செய்ய சில வழிமுறைகள் உள்ளதோ அதேபோல் எல்ஐசி-க்கும் உள்ளது. ஆனால் இதற்கு முன்பு தொகையை உரியவர்களிடம் சேர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் LIC பாலிசிதாரர்களின் பணத்தை உரியவர்களுக்குக் கொடுக்க பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது. லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா பிரிண்ட், டிஜிட்டல் மற்றும் ரேடியோ ஊடகங்கள் மூலம் கோரப்படாத தொகையைப் பெற்றுக்கொள்ள பல்வேறு விளம்பரங்களைச் செய்து வருகிறது.
இதேபோல் பாலிசிதாரர்களுக்கு நினைவூட்டும் வகையில் எல்ஐசி முதிர்வு பெற்ற பாலிசி உரிமையாளர்களுக்கு கடிதங்கள் மற்றும் SMS மூலம் தொடர்ந்து நினைவூட்டி வருகிறது. மேலும், LIC தனது கிளைம் செய்யும் செயல்முறையை எளிமைப்படுத்தி, பாலிசிதாரர்கள் தங்கள் பணத்தை எளிதாகவும் விரைவாகவும் பெற உதவுகிறது.
எல்ஐசி நிர்வாகம் தற்போது கிளைம் தொகையை NEFT வகையிலான பேமெண்ட்டை செய்து வரும் காரணத்தால் வேகமாக செட்டில் செய்யப்படுகிறது. ஆயினும் 2023-24 நிதியாண்டில் கிளைம் செய்யப்படாத தொகை 880 கோடி ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications