தி அமெரிக்கன் டிரீம் என்ற வியாதி இந்திய மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது, அதிலும் குறிப்பாக இந்திய நடுத்தர மற்றும் டெக் ஊழியர்கள் மத்தியில் அதிகம். அமெரிக்க வேலை, அமெரிக்காவில் காஸ்ட்லியான கார், அமெரிக்காவில் சொந்த வீடு, குடும்பம், குழந்தை என அமெரிக்காவிற்குப் பிளைட் ஏறும் அனைவரின் மனத்திலும் ஓடும் எண்ணங்கள் இதுதான்.
அமெரிக்கா சென்று சில வருடங்கள் வேலை பார்த்த 100ல் 90 பேருக்கு இந்தியா வருவதற்கான எண்ணம் இருக்காது, அப்படி திரும்ப வரும் பலருக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் காரணமாக இருக்கும். இந்த நிலையில் அமெரிக்க அரசு அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களைத் தக்க வைப்பதில் புதிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் ஹெச்1பி விசா கீழ் பணியாற்றும் மக்கள் தங்களுடைய விசா காலம் முடிந்துவிட்டால் விசா ரினிவல் செய்ய அவர்களது சொந்த நாட்டுக்கு சென்று விசா ரினிவல் செய்யப்பட வேண்டும். இப்படிச் செல்லும் வெளிநாட்டவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் அமெரிக்கா திரும்புவது இல்லை. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் குறுகிய கால அடிப்படையில் பாதிக்கப்படுகிறது.
இதைச் சரி செய்யும் விதமாகப் பல வருடங்களுக்கு முன்பு நடைமுறையில் இருந்த ஒரு திட்டத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு செய்தது. இந்தத் திட்டத்திற்குத் தற்போது அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருக்கும் தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகார துறை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்தில் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஹெச்1பி விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவிலேயே அவர்களுடைய விசா-வை ரினிவல் செய்ய முடியும். இந்தச் சிறப்புத் திட்டத்தின் சோதனை ஜனவரி மாதம் நடக்க உள்ளது, முதல் கட்டமாக 20000 விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்ய உள்ளது அமெரிக்க அரசு.
இத்திட்டம் அமெரிக்காவில் ஏற்கனவே ஹெச்1பி விசாவில் பணியாற்றுவோருக்கு மட்டுமே பொருந்தும். மேலும் இந்தச் சோதனை திட்டத்தில் எவ்விதமான தகுதிகள் பார்க்கப்படும், எப்படி விண்ணப்பத்தைக் கையாளப்போகிறது ஆகியவற்றைக் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது என்பது குறித்து அடுத்தச் சில நாட்களில் அறிவிக்கும்.
அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் பணியாற்றுவோர் எண்ணிக்கையில் அதிகப்படியாக இந்தியர்களும், சீனர்களும் இருக்கும் வேளையில் இத்திட்டம் மூலம் இந்தியர்களுக்குப் பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகிறது. ஏற்கனவே சீனர்களுக்கான விசா, குடியுரிமை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் அமெரிக்கா விதித்துள்ளது.


Click it and Unblock the Notifications