இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊதிய உயர்வு விகிதத்தை குறைத்திருக்கும் நிலையில் இளம் தொழில் நிபுணர்கள் தேவையற்ற செலவினங்களை குறைத்து முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும் என பங்குச்சந்தை நிபுணர் விவேக் சிங்கால் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் தங்களுடைய நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு கூட 4 சதவீதம் வரை மட்டுமே ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்திருந்தது. குறிப்பாக 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்தவர்களுக்கு கூட 2 சதவீதம் வரை மட்டுமே ஊதிய உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஊதிய உயர்வு வழங்குவதையே ஒரு காலாண்டுக்கு தள்ளி வைத்துள்ளது. இவ்வாறு பல்வேறு நிறுவனங்களும் ஊதிய உயர்வு வழங்கும் விகிதத்தை குறைத்து வரக்கூடிய நிலையில் மக்கள் செலவினங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என முதலீட்டு துறை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த நிபுணர்கள் அறிவுரை வழங்க தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்திருக்கும் விவேக் சிங்கால் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு கூட மூன்று முதல் நான்கு சதவீதம் வரை தான் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது என ஹெச்சிஎல் நிறுவன ஊதிய உயர்வு செய்தியை பகிர்ந்துள்ளார்.
இனியும் தாமதம் செய்யாதீர்கள், தேவையற்ற செலவினங்களை குறைத்து முதலீட்டை தொடங்குங்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறந்த முதலீடுகளை மேற்கொண்டு ஒரு கணிசமான நிதி தொகுப்பு கொண்ட போர்ட் போலியோவை உங்களுக்கென உருவாக்கிக் கொள்ளுங்கள். ஓய்வு பெற்ற பிறகு உங்களுக்கு ஊதியம் வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.
அவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. இந்தியாவில் தற்போது பணவீக்க விகிதம் அதிகரித்து வருகிறது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பணவீக்க விகிதத்திற்கு ஏற்ற வகையில் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தராமல் இருக்கின்றன .
சில மாதங்களுக்கு முன்பு கூட இந்திய நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டினாலும் ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளாக பெரிய அளவில் ஊதிய உயர்வை வழங்கவில்லை என ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தான் மக்கள் தேவையற்ற செலவுகளை குறைத்து எதிர்காலத்திற்காக இதுவரை சேமிக்க தொடங்கவில்லை என்றால் தற்போது இருந்து சேமிக்க தொடங்கி விட வேண்டும் என பலரும் கூறுகின்றனர். குறிப்பாக மருத்துவ செலவுகள், கல்வி செலவுகள் அதிகரிப்பதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
More From GoodReturns

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications