எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. உங்க கணக்கில் 147.5 ரூபாய் கழிக்கப்பட்டு உள்ளதா..?

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நாட்டின் பெரும் பகுதி மக்களைத் தனது வாடிக்கையாளர்களாக வைத்திருக்கும் நிலையில் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட தொகையைத் திடீரென வசூலித்துள்ளது.

பொதுவாக வங்கி கணக்கில் இருந்து டெபிட் செய்யப்படும் தொகையை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சில நேரத்தில் சிறிய தொகையை வங்கிகள் பல காரணத்திற்காக வசூலிக்கும், அதை எதற்காகச் செய்கிறது என்பதை நாம் கட்டாயம் தெரிந்துகொள்ளும்.

அதிலும் குறிப்பாக அதிகம் பயன்படுத்தாத கணக்கின் விபரங்களை அடிக்கடி செக் வேண்டியது கட்டாயமாகும். இப்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தற்போது 147.5 ரூபாயை பெரும்பாலான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்துள்ளது. இது எதற்காக..?

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மாறிவரும் இணையச் சேவை காலத்திற்கு ஏற்ப, வங்கி தனது செயல்பாட்டுப் பாணியையும் மாற்றிக்கொண்டு பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படியொரு சேவைக்குத் தான் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 147.5 ரூபாயை வசூலித்துள்ளது.

147.5 ரூபாய்

147.5 ரூபாய்

உங்கள் பாஸ்புக் அல்லது பேங்க் ஸ்டேட்மெண்ட்டை கவனித்தீர்களா அல்லது எஸ்பிஐ உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து திடீரென ரூ.147.5 டெபிட் செய்திருப்பதைக் பார்த்தீர்களா? ஆம் எனில், உங்களுக்கான பதில் எங்களிடம் உள்ளது.

டெபிட் கார்டு

டெபிட் கார்டு

நீங்கள் பயன்படுத்தி வரும் எஸ்பிஐ டெபிட் கார்டு-க்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தின் கீழ் உங்கள் கணக்கிலிருந்து எஸ்பிஐ நிர்வாகம் சுமார் 147.5 ரூபாய் தொகையைக் கழிக்கப்பட்டு உள்ளது.

ஏடிஎம் சேவை

ஏடிஎம் சேவை

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு வங்கி நிர்வாகம் ஒரு டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. மக்கள் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கவும், ஷாப்பிங் செய்வதற்கும் ஆன்லைனில் பணம் செலுத்த இது பயன்படுகிறது.

ஒரு ஏடிஎம் கார்டு மூலம் பல சேவைகளை நாம் வங்கி கிளைக்குச் செல்லாமலேயே பெற முடியும் என்பதால் இதற்கென ஒரு கட்டணத்தை வசூலிக்கிறது வங்கி நிர்வாகம்.

டெபிட் கார்டு வகைகள்

டெபிட் கார்டு வகைகள்

எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான டெபிட் கார்டுகளை வழங்குகிறது, அவற்றில் பெரும்பாலானவை கிளாசிக் / சில்வர் / குளோபல் / கான்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளாகும். இந்த டெபிட் கார்டுக்கு வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் 125 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறது.

வருடாந்திர பராமரிப்புக் கட்டணம்

வருடாந்திர பராமரிப்புக் கட்டணம்

டெபிட் கார்டுக்கு வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் 125 ரூபாய் தான், உங்கள் கணக்கில் இருந்து 147.5 ரூபாய் ஏன் கழிக்கப்பட்டது என்று நீங்கள் நினைக்கலாம். ஏனெனில் இந்தச் சேவைக் கட்டணத்தில் 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. எனவே, ரூ.125ல் 18% = ரூ.22.5. இப்போது, ரூ.125+ரூ.22.5 = 147.5 ரூபாய்.

பிற ப்ரீமியம் கார்டு

பிற ப்ரீமியம் கார்டு

யுவா / கோல்ட் / காம்போ / மை கார்டு (உங்களின் புகைப்படம் கொண்ட) டெபிட் கார்டுக்கு ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் ரூ. 175 + ஜிஎஸ்டி, பிளாட்டினம் டெபிட் கார்டுக்கு ரூ. 250+ ஜிஎஸ்டி, மற்றும் பிரைட் / பிரீமியம் பிசினஸ் டெபிட்டுக்கு ரூ. 350+ ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பிற சேவைகள்

பிற சேவைகள்

மேலும், நீங்கள் புதிய டெபிட் கார்டை பெற விரும்பினாலோ, அல்லது பழைய டெபிட் கார்ட்-ஐ மாற்ற விரும்பினாலோ, வங்கி ரூ. 300 + ஜிஎஸ்டியை வசூலிக்கிறது. மேலும் இதற்குச் சேவை கட்டணம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+