இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ இப்போது நான்கு ப்ரீபெய்டு பிளான்களில் தினமும் 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும் வகையில் வடிவமைத்துள்ளது.
இதில் மூன்று பிளான்கள் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். நான்காவது பிளான் வேலிடிட்டி 30 நாட்கள். இந்த 30 நாள் பிளான் கட்டணம் ரூ.349 ஆகும். இதில் தினமும் 2.5 ஜிபி டேட்டாவை 30 நாட்களுக்குப் பெறலாம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 ரீசார்ஜ் பிளான் 30 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. மொத்தம் 75 ஜிபி என தினமும் 2.5 ஜிபி ஹைஸ்பீடு டேட்டாவை பெறலாம். இந்த திட்டத்தில் 2.5 ஜிபி டேட்டா முடிந்த உடன் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறலாம். இது 4ஜி டேட்டாவை விட அதிக வேகமாக இருக்கும்.
இது தவிர யூசர்கள் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பலாம். அது மட்டுமல்லாமல் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட்டையும் பெறலாம்.
இது ஜியோ சினிமா பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் பண்டில் இல்லை. உங்களுக்கு ஜியோ சினிமாவின் பிரீமியம் கன்டன்ட் வேண்டுமென்றால் அதற்கென இரண்டு பிளான்கள் உள்ளன.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 பிளான் என்பது தினமும் ரூ.11.63 தான் செலவாகும். மற்ற பிளான்களை விட இது அதிக செலவு என்பது போலத் தெரிந்தாலும் இதில் ஏராளமான 4ஜி டேட்டா கிடைக்கும். தினமும் 1 ஜிபி கிடைக்கும் பிளான் கட்டணம் தினமும் ரூ.4.6 செலவாகும். அப்படிப்பார்த்தால் ரூ.349 பிளான் மிகவும் மலிவாகும்.
தினசரி கோட்டா முடிந்துவிட்டால் டேட்டா வேகம் 64 கேபிபிஎஸ் அளவுக்கு குறைந்து விடும். நீங்கள் 5 ஜி கவரேஜ் பகுதியில் இருந்தால் இதுபோன்ற ஸ்லோ ஸ்பீடு இன்டர்நெட் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
சிறந்த ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்
ரூ 555 ஜியோ திட்டம்: செல்லுபடியாகும் காலம்: 84 நாட்கள், நன்மைகள் - 1.5 ஜிபி/நாள்.
ரூ.599 ஜியோ திட்டம்: செல்லுபடியாகும் காலம்: 84 நாட்கள், நன்மைகள் - 2ஜிபி/நாள்.
ரூ.999 ஜியோ திட்டம்: செல்லுபடியாகும் காலம்: 84 நாட்கள், நன்மைகள் - 3ஜிபி/நாள்.
குரல் அழைப்புகள், அதிவேக டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய குறுகிய காலத்துக்கு ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் ஜியோ ரூ. 209 திட்டம் சரியான விருப்பம். இந்தத் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு மொத்தம் 1ஜிபி உண்மையான 5ஜி அதிவேக டேட்டா (அதற்குப் பிறகு, வரம்பற்ற இணையம் 64கேபிபிஎஸ்) மற்றும் 28 நாட்களுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
Story written by: Jayachandran
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications