ஜெர்மனியை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி சீனாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய காரில் தங்களுடைய வழக்கமான லோகோவை கைவிட்டிருப்பது தற்போது பேசு பொருளாகியுள்ளது.
அண்மையில் தான் பிரபல ஜாகுவார் நிறுவனம் தங்களுடைய புகழ்பெற்ற லோகோவை மாற்றி அமைத்தது. அதற்கு போட்டியாக ஆடி நிறுவனமும் லோகோவை மாற்றி இருப்பதாக தெரிகிறது. ஒரு நிறுவனத்தின் அடையாளமாக அவற்றின் லோகோ தான் செயல்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட லோகோவை வைத்து அது எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பதே நாம் கண்டறிந்து விட முடியும். குறிப்பாக கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அவர்களின் லோகோ மிகவும் பிரபலமானது. அவை மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவதால் அத்தனை எளிதாக அதனை மாற்றி விட மாட்டார்கள். அந்த வகையில் ஆடி கார் நிறுவனத்தின் லோகோ மிகவும் பிரபலமானது. காரின் முன்பக்கத்தில் இருக்கும் அந்த லோகோவே கார் உரிமையாளர்களுக்கு கெத்தை வழங்கும்.
ஆனால் அண்மையில் தான் ஜாகுவார் நிறுவனம் தங்களுடைய லோகோவை மாற்றி அமைத்தது. தங்களுடைய மின்சார காரில் புதிய லோகோவை பதிவு செய்திருந்தது. இந்த நிலையில் ஆடி நிறுவனமும் தனது லோகோவை மாற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆடி நிறுவன காரில் வழக்கமாக இடம்பெறக்கூடிய லோகோ இல்லை. அதற்கு பதிலாக ஆடி என்ற பெயர் எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆடி நிறுவனம் கடந்த 1930ஆம் ஆண்டு தான் காருக்கான லோகோவை முதன் முதலில் பயன்படுத்தியது. நான்கு வளையங்கள் போன்ற அமைப்பை அடுத்தடுத்து வைத்தது போன்ற ஒரு லோகோவை உருவாக்கியது. இத்தனை ஆண்டு காலம் கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த இந்த லோகோ தான் தற்போது மாற்றப்பட்டு இருக்கிறது. சீனாவில் ஆடி நிறுவனமும் அதன் நாட்டை சேர்ந்த மற்றொரு நிறுவனமும் சேர்ந்து மின்சார வாகனங்களை தயார் செய்கின்றன.
இந்த நிறுவனங்கள் புதிய மின்சார காரை அறிமுகம் செய்துள்ளன. அதில் தான் ஆடி நிறுவனத்தின் லோகோவிற்கு பதிலாக ஆடி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மின்சார கார்களுக்காக ஆடி நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறதா என்று வாதம் எழுந்துள்ளது.
ஏனெனில் ஜாகுவார் நிறுவனம் தங்களுடைய மின்சார கார்களுக்காகத்தான் லோகோவை மாற்றியது அதையே பின்பற்றி ஆடியும் மின்சார கார்களுக்கான லோகோவை மாற்றி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருந்தாலும் லோகோ மாற்றம் ஆடி ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications