அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து வந்த செபி, சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நாள் ஆகஸ்ட் 14 (இன்று). செபி ஆய்வு முடிவுகளில் தான் பல லட்சம் ஆதானி குழும முதலீட்டாளர்களின் முதலீடுகள் பாதுக்காப்படுமா அல்லது பாதாளத்திற்கு வீழுமா என்று தெரியும்.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவின் ஷாட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிட்ட அறிக்கையின் மூலம் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சுமார் 150 கோடி ரூபாய் அளவில் சரிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி-க்கு உத்தரவிடப்பட்டு போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்ட அடுத்த சில நாளில் இருந்தே செபி தனது விசாரணையை துவங்கினாலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் மூலம் மக்களின் முதலீடு எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளது, பங்கு விலையை செயற்கையாக உயர்த்த விதிமுறைகள் மீறப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை திருப்பிவிடப்பட்டது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் அளித்த கால அவகாச நீட்டிப்புக்கு பின்பு, ஆய்வை வேகப்படுத்திய செபி தற்போது தனது பணிகளை முடித்து இறுதி அறிக்கையை தயாரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இறுதி அறிக்கையில் தான் செபி தனது ஆய்வில் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை உறுதி செய்துள்ளதா அல்லது அது பொய்யான குற்றச்சாட்டுகளா என்பதை புட்டு புட்டு வைக்க உள்ளது.
செபி தனது இறுதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 14 ஆம் தேதி கடைசி நாளாக இருந்தாலும், இதுகுறித்த விசாரணை ஆகஸ்ட் 29 ஆம் தேதி தான் நடக்க உள்ளது.
இந்த ஆய்வில் அனைத்து பங்குதாரர்களும முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டியது, அதானி குழும தலைவர் போலி வெளிநாட்டு நிறுவனங்கள் வாயிலாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை கூடுதலாக தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்ட செபியின் minimum public shareholding (MPS) விதிமுறைகளை மீறியதா என்பது தான்.
இதை தான் சார்ந்து சமார் 13 ஒப்பந்தங்கள் செபி ஆய்வு செய்து வருகிறது, இந்த நிலையில் தான் அதான் போர்ட்ஸ் மற்றும் SEZ நிறுவனத்தின் ஆடிட்டர் Deloitte Haskins & Sells சில பரிமாற்றத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதால் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications